விஐபி-ல நடிச்ச அமுல்பேபியா இவரு .. செம ஸ்மார்ட்டா இருக்காரேய்யா!
சென்னை : வேலையில்லா பட்டதாரியில் அமுல்பேபி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் நடிகர் அமிதேஷ்.
இப்பொழுது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இப்பொழுது ஆளே டோட்டலாக மாறி செம ஸ்மார்ட்டாக உள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கல்லூரி நண்பராக
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரியில் ஸ்வீட்டான வில்லன் ரோலை வலிக்காமல் செய்து காட்டி அனைவரையும் ரசிக்க வைத்தவர் நடிகர் அமிதேஷ். இவர் ஏற்கனவே சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கல்லூரி நண்பராக வந்து இருப்பார் ஆனால் இவருக்கு வேலையில்லா பட்டதாரி மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

தெலுங்கு ஆடியன்ஸையும்
இப்பொழுது சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துவரும் அமிதேஷ் தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் கடந்த 2015ல் ராம் சரண் நடிப்பில் வெளியான புரூஸ்லீ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தெலுங்கு ஆடியன்ஸையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இரண்டாவது கதாநாயகனாக
வானம் கொட்டட்டும், குட்டி ஸ்டோரி ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது அதர்வாவின் தள்ளிப்போகாதே படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான நின்னுக்கோரி தமிழ் ரீமேக் ஆகும். ஆர்.கண்ணன் இப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார். அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பாலிவுட் ஹீரோ போல
இதுவரை முழு கதாநாயகனாக திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ள அமிதேஷ் இதுவரை பலருக்கும் அமுல்பேபியாக மட்டுமே அறியப்பட்ட நிலையில் இப்பொழுது ஆளே டோட்டலாக மாறி பாலிவுட் ஹீரோ போல செம ஸ்மார்ட் ஆகியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பெண் ரசிகைகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. பக ஒரு கலக்கு கலக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











