»   »  'காணாமல் போன மகனைக் கண்டுபிடிக்க உதவுங்கள்'... மதனின் தாயார் பரபரப்பு பேட்டி

'காணாமல் போன மகனைக் கண்டுபிடிக்க உதவுங்கள்'... மதனின் தாயார் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காணாமல் போன தன்னுடைய மகனைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று மதனின் தாயார் தங்கம் பேட்டியளித்திருக்கிறார்.

கடந்த வாரம் வேந்தர் மூவிஸ் மதன் கடிதம் எழுதி வைத்து விட்டுக் காணாமல் சென்றது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கங்கையில் சமாதி ஆகப்போவதாக சென்ற மதன் உயிருடன் இருக்கிறாரா? என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் பலவழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

மதன்

எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பாரிவேந்தரிடம் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக, கங்கை நதியில் சமாதி அடையப் போகிறேன் என்று தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த வாரம் தலைமறைவானார் வேந்தர் மூவீஸ் மதன்.

பாரிவேந்தர்

ஆனால் எஸ்ஆர்எம் பாரிவேந்தர் , மதனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை அவர் ஒரு மோசடிப் பேர்வழி என்று கூறிவிட்டார். மற்றொருபுறம் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் அவரைச் சேர்ந்த சிலர் வாரணாசி வரை சென்று போலீஸ் துணையுடன் கங்கை நதியில் படகுகளில் தேடிப் பார்த்தனர். தீவிரமாகத் தேடிப் பார்த்தும் மதன் கிடைக்கவில்லை.

தங்கம்

இந்நிலையில் மதனின் தாயார் தங்கம் மதனைக் கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார். இதுகுறித்து மதனின் தாயார் '' என் மகனைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. மதன் தனது கடிதத்தில் கூறியது அனைத்தும் உண்மை.பாரிவேந்தரைக் கடவுளாகப் பாவித்து வந்தார்.

பணம்

சேர்க்கைக்காக மாணவர்கள் கொடுத்த பணம் எஸ்ஆர்எம் குழுமத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.மதன், பாரிவேந்தருக்கு இடையே ஏதோ பனிப்போர் நடந்துள்ளது என நினைக்கிறேன். மதன் காணாமல் போன செய்தி குறித்து சொல்ல சென்றபோது பாரிவேந்தர் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை.

பாரிவேந்தர் மகன்

எனது மகன் மதனுக்கும், பாரிவேந்தர் மற்றும் அவரது மகன் ரவிக்கும் இடையில் பிரச்சினை இருந்தது. மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீஸ் மற்றும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்திருக்கிறோம். மேலும் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு கொடுத்து மதனைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டிருக்கிறோம். எனது மகன் எழுதிய கடிதத்தில் யாரையும் மிரட்டவில்லை. ஆனால் எனது மகனின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை '' என்று கூறியிருக்கிறார்.

English summary
''Please Help me Find my Son'' Vendhar Movies Madhan Mother said in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil