Mallipoo: எல்லாரும் இப்போ இதைத்தான் வைப் பண்றாங்க.. டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் VTK மல்லிப்பூ!

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மல்லிப்பூ பாடல் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

தியேட்டரில் இந்த பாடலுக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் எழுந்து ஆடும் காட்சிகள் #MalliPoo என்கிற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.

மிகவும் இயல்பாக லுங்கியை தூக்கிக் கட்டிக் கொண்டு சிம்பு போடும் நடனம் ரசிகர்களையும் அவரது ரசிகைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சிம்புவுக்கு இன்னொரு ஹிட்

சிம்புவுக்கு இன்னொரு ஹிட்

AAA, வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் கை கொடுக்காத நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சிம்புவின் மாநாடு படத்தை படத்தை போலவே ரசிகர்களும் வந்தான்.. பார்த்தான்.. ரிப்பீட்டு மோடில் பார்த்து மிகப்பெரிய வெற்றியை அடைய வைத்தனர். அதன் பிறகு ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த மஹா படம் பெரிதாக போகவில்லை. அதில், சிம்பு கேமியோ தான் என்பதால் சிம்பு ரசிகர்களே கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவுக்கு இன்னொரு ஹிட்டாக வெந்து தணிந்தது காடு மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாடல்கள் பக்கா

பாடல்கள் பக்கா

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா வரிசையில் தற்போது வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் அத்தனை பாடல்களும் பின்னணி இசையும் தரமாக உருவாகி உள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் கிடைத்துள்ளனர்.

மல்லிப்பூ வைப்

மல்லிப்பூ வைப்

இன்றைய இளைஞர்களின் இமிடியேட் ஃபேவரைட் பாடலாக வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ல மல்லிப்பூ பாடல் ரசிகர்களை தொடர்ந்து வைப் செய்ய வைத்துள்ளது. #MalliPoo என்கிற ஹாஷ்டேக்கையே போட்டு காலை முதல் சிம்பு ரசிகர்கள் ட்விட்டர் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சிம்புவின் ஸ்லீப்பர் செல்ஸ்

சிம்புவின் ஸ்லீப்பர் செல்ஸ்

சோஷியல் மீடியாவில் சிம்புவுக்கு இப்படியொரு ரசிகர் பட்டாளமா என மற்ற பிரபலங்களே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்கு கடந்த இரு நாட்களாக வெந்து தணிந்தது காடு தொடர்ந்து ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது. ஏகப்பட்ட சிம்பு ரசிகர்கள் தியேட்டரில் மல்லிப்பூ பாடலுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் நடனமாடும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் தான் கிங்

ஏ.ஆர். ரஹ்மான் தான் கிங்

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு சிம்புவின் கடின உழைப்பும் நடிப்பும் ஒரு பக்கம் பலம் என்றால் இன்னொரு புறம் ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான். ஸ்லோவாக நகரும் காட்சிகளுக்கும் தனது இசையால் உயிர் கொடுத்து இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் என சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்து பத்து தல

அடுத்து பத்து தல

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படமும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு எந்த இயக்குநருடன் நடிக்கப் போகிறார் என்பதையும் இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X