Don't Miss!
- News
"டுவிஸ்ட்".. பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில் பேனர்! என்ன எழுதி இருக்கு? எச்.ராஜா வீட்டருகே பரபர
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Lifestyle
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என் புருஷன் மரணத்தை பற்றி தெரியாம.. தப்பா பேசாதீங்க.. ஹரி வைரவன் மனைவி கண்ணீர் பேட்டி!
சென்னை: வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரி வைரவனின் மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவது வேதனை அளிப்பதாக ஹரி வைரவனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரி வைவரவன்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்க போதிய பண வசதி இல்லாத நிலையில், பரிதாபமான சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தீடிரென உயிரிழந்தார் நடிகர் ஹரி வைரவன்.
வெண்ணிலா
கபடிகுழு
ஹரி
வைரவனின்
கடைசி
வாய்ஸ்
மெசேஜ்..கலங்கிய
விஷ்ணு
விஷால்!

வெண்ணிலா கபடி குழு நடிகர்
விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நான் மகான் அல்ல, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களிலும் விஷ்ணு விஷாலின் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வறுமையில் வாடினார்
அதன் பிறகு பல ஆண்டுகளாக சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் குடும்பத்தை நடத்த முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் சீறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், ஒரு வீடியோ வெளியிட்டு நடிகர்களிடம் உதவி கோரினார்.

38 வயதில் மரணம்
விஷ்ணு விஷால், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் ஹரி வைரவனின் சிகிச்சைக்காக சில உதவிகளை செய்தனர். அதன் பின்னர் சில காலம் தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், மருத்துவ செலவுக்கு பணம் போதாத நிலையில், மீண்டும் அரசு மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், வீட்டிலேயே மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்த அவர் குணமடைந்து விடுவார் என நினைத்த அவரது மனைவி கவிதாவுக்கு ஹரி வைரவன் திடீரென தனது கண் முன்னரே உயிரிழந்து போனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வயிறு வெடிச்சு இறந்தாரா
உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த ஹரி வைரவன் கிட்னி ஃபெயிலியரான நிலையில், வயிறு வெடித்து இறந்து விட்டதாக சில யூடியூப் சேனல்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதை அறிந்த அவரது மனைவி கவிதா ரொம்பவே மன வேதனையில் ஆழ்ந்துள்ளார். ஏற்கனவே கணவரை இழந்து வாடும் அவரை இப்படி வேதனைப்படுத்துவதா என கேள்விகள் கிளம்பிய நிலையில், அது தொடர்பாக கவிதா அளித்த பேட்டி ரசிகர்களை உலுக்கி உள்ளது.

தப்பா பேசாதீங்க
உடல் நலக் குறைவு காரணமாக படுத்த படுக்கையாக கிடந்த ஹரி வைரவன் சில காலம் கோமாவுக்கு கூட சென்று விட்டார். அப்போது கூட அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். கடைசியாக அவர் இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன்னாடி கூட வியர்க்குதுன்னு சொன்னாரு, நான் தான் துண்டை எடுத்து துடைத்து விட்டுக் கொண்டே என்ன செய்துங்கன்னு கேட்டேன்.. அப்படியே என் கண் முன்னாடியே அவர் உயிர் பிரிந்து போயிடுச்சு.. இந்த மாதிரி சூழலில் அவர் வயிறு வெடித்துத் தான் இறந்தாருன்னு எப்படி சொல்வீங்க.. நான் உங்க கிட்ட சொன்னேனா என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். புகாரி ஜங்ஷன் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டியை ஹரி வைரவனின் மனைவி கவிதா அளித்துள்ளார்.
|
உதவி செய்யுங்க
ஒரு குழந்தையுடன் கணவரை இழந்து வாடும் கவிதாவுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான பண உதவியை நடிகர் சங்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குழந்தையின் படிப்பு செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் உறுதியளித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.