Laal Singh Chaddha Box Office: அடிமட்டத்துக்கு சென்ற அமீர்கான் படத்தின் முதல் நாள் வசூல்!

சென்னை: பாலிவுட்டை அமீர்கான் படம் வந்தாவது காப்பாற்றும் என எதிர்பார்த்த நிலையில், அமீர்கானையே இப்போ யாரு காப்பாத்துவான்னு தெரியாத நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது லால் சிங் சத்தா படத்தின் முதல் நாள் வசூல்.

Recommended Video

Laal Singh Chaddha Public Review | Laal Singh Chaddha Tamil Cinema Review | Aamir Khan |*Review

இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யா நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படத்திற்கே முதல் நாளில் இதை விட கலெக்‌ஷன் அதிகமாக இருக்கும் என்றும் அமீர்கானின் தயாரிப்பில் வெளியான படத்திற்கு செம அடி என்றும் பாலிவுட் ரசிகர்கள் பாய்காட் டிரெண்டிங் வென்று விட்டது என கொண்டாடி வருகின்றனர்.

காஸ்டிங் தப்பு

காஸ்டிங் தப்பு

அதுல் குல்கர்னி தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தை நம்ம நாட்டுக்கு ஏற்றப்படி மாற்றி எழுதியது எல்லாம் நல்லா தான் இருந்தது. ஆனால், அதில் அவர் அமீர்கான் மற்றும் கரீனா கபூரை போட்டு தப்பு செய்து விட்டார் என திரைக்கதையாசிரியர் அதுல் குல்கர்னி மற்றும் படத்தை இயக்கிய அத்வைத் சந்தனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

லால் சிங் சத்தா திரைப்படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் என கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. அமீர்கானின் அந்த பிகே நடிப்பு படத்தை மொத்தமாக கெடுத்து விட்டதாக படம் பார்த்த பலரும் விளாசி உள்ளனர். மற்ற இடங்களில் அமீர்கான் ஸ்கோர் செய்தாலும், பாய்காட் லால் சிங் சத்தா டிரெண்டிங் தான் இந்த முறை ஜெயித்து விட்டது என்கின்றனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

அமீர்கானின் லால் சிங் சத்தா முதல் நாளில் 15 கோடி தான் வசூல் செய்யும் என கணிப்பே குறைவாக இருந்த நிலையில், 3000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் வெளியான இந்த படம் முதல் நாளில் 11 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

180 கோடி பட்ஜெட் போச்சு

180 கோடி பட்ஜெட் போச்சு

முதல் நாளிலேயே 11 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், இந்த படத்துக்கு ஏன் அமீர்கான் 180 கோடி பட்ஜெட் செய்து காசை கரியாக்கி விட்டார் என்றும் பாலிவுட்டில் மற்றொரு டிசாஸ்டர் படமாக லால் சிங் சத்தா படம் மாறி விட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சீக்கிரமாக ஓடிடிக்கு நல்ல தொகைக்கு விற்று ரிலீஸ் செய்தால் கொஞ்சமாவது தப்பிக்கலாம் என்றும் அமீர்கானுக்கு அட்வைஸா பறக்கின்றன.

கங்கனா ஹேப்பி ஆகிடுவாங்களே

கங்கனா ஹேப்பி ஆகிடுவாங்களே

அமீர்கான் படத்துக்கும் பாலிவுட்டில் ரசிகர்கள் மரண பயத்தை காட்டிய நிலையில், கங்கனா ரனாவத் பயங்கர ஹேப்பி ஆகிடுவாங்க என பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். காதலித்த மனைவிகளை கழட்டி விட்ட நிலையில், இந்த வயதில் அமீர்கான் காதல் படத்தில் நடித்தால் எப்படி ஓடும் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X