பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்.. திரை பிரபலங்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார். அவருக்கு வயது 98.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்டாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திலீப்குமார் மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வந்தார். 98 வயதான திலீப்குமாருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இந்துஜா மருத்துவமனையில்

இந்துஜா மருத்துவமனையில்

இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி திடீரென நடிகர் திலீப்குமாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் திலீப்குமார்.

குடும்ப நண்பர்

குடும்ப நண்பர்

ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது முதிர்வால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நெருங்கிய குடும்ப நண்பரான ஃபைஸல் ஃபருக்கி டிவிட்டரில் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு

சில வாரங்களுக்கு முன்பு

முதுமை காரணமாக திலீப் குமாருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திலீப்குமார். 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

காலமானார் திலீப்குமார்

காலமானார் திலீப்குமார்

இந்நிலையில் நடிகர் திலீப்குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக குயிலா..

கடைசியாக குயிலா..

பாலிவுட்டில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வந்த திலீப்குமார் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக 1998ஆம் ஆண்டு குயிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்து வந்ததார். திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X