»   »  தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஓம் பூரி மரணம்!

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஓம் பூரி மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தேசிய விருது பெற்ற மூத்த நடிகர் ஓம் பூரி இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

1950-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி ஹரியானா மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் ஓம் பூரி. காஷிராம் கோட்வால் என்ற மராத்திப் படத்தில் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு பல இந்திப் படங்களில் நடித்தார்.

Veteran actor Om Puri passes away

கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஓம் பூரி, பாலிவுட்டில் தனது நுணுக்கமான நடிப்பால் தலை சிறந்த நடிகராக திகழ்ந்தார். மிர்ச்சி மசாலா, தாராவி போன்ற படங்களில் ஓம் பூரியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

1982-ல் வெளியான ஆரோஹன், 1984-ல் வெளியான அர்த் சத்யா ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார் ஓம் பூரி.

1990-ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் பட உலகில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஓம் பூரி.

இப்போதும் இரண்டு கன்னடப் படங்கள், ஒரு பாகிஸ்தானி படம் மற்றும் ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஓம் பூரி. சமீபத்தில் அவர் நடித்த மலையாளப் படம் ஒன்று செண்பகக் கோட்டை என்ற பெயரில் தமிழில் வெளியானது.

இந்த நிலையில்தான் அவருக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.

ஓம் பூரியின் மரணம் பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட்டின் அத்தனை நடிகர் நடிகைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

English summary
Veteran actor Om Puri has passed away after a massive heart attack early on Friday morning. The actor was 66.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil