twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Prathap Pothen: நடிகர் பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!

    |

    சென்னை: அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69.

    Recommended Video

    நடிகர் பிரதாப் போத்தன் காலமானார் | Prathap Pothen | RIP

    1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன்.

    1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

    பிரதாப் போத்தன் காலமானார்

    பிரதாப் போத்தன் காலமானார்

    மூத்த நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 69. 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் பிரதாப் போத்தன். 1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

    சென்னையில் வீடு

    சென்னையில் வீடு

    தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் பிரதாப் போத்தன் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தான் உயிர் துறந்துள்ளார். அவரது உடல் தற்போது இறுதி அஞ்சலிக்காக அங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகம் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த படையெடுத்து வருகின்றனர்.

    மூடுபனியை மறக்க முடியுமா

    மூடுபனியை மறக்க முடியுமா

    மூடுபனியில் அவர் ஏற்ற சைகோ கில்லர் பாத்திரம் அவருக்கு தமிழ் திரையுலகில் மாஸ் என்ட்ரியை கொடுத்தது. என் இனிய பொன் நிலாவே ஜேசுதாசின் பாடலும் மிகப்பிரபலம். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிக்கும் நாடக டைரக்டராக வருவார், வாழ்வே மாயத்திலும் அதே போல் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிக்கும் குடும்ப நண்பராக வருவார். பன்னீர்புஷ்பங்கள் இவர் நடித்ததில் சிறப்பான படம். விசு படங்களில் நடித்துள்ளார்.

    இயக்குநர் பிரதாப் போத்தன்

    இயக்குநர் பிரதாப் போத்தன்

    1985ம் ஆண்டு தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கி இயக்குநராகவும் அசத்தினார் பிரதாப் போத்தன். ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ளார். அனைத்து முன்னணி நடிகர்களுடன் பிரதாப் போத்தன் மிகுந்த நட்பு பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    ராதிகாவின் கணவர்

    ராதிகாவின் கணவர்

    நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் பிரதாப் போத்தன். ஆனால், ஒரே ஆண்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1986ம் ஆண்டு பிரிந்தனர். 1990ம் ஆண்டு அமலா சத்யனாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கேயா எனும் மகள் அந்த தம்பதியினருக்கு உள்ளனர். ஆனால், அந்த திருமணமும் 2012ம் ஆண்டு விவாகரத்தானது.

    கடைசி வரை நடிப்பு

    கடைசி வரை நடிப்பு

    தனுஷின் படிக்காதவன் படத்தில் அப்பாவாக நடித்து இருப்பார் பிரதாப் போத்தன். விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான மம்மூட்டியின் சிபிஐ 5 படத்திலும் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில், அவர் காலமான செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    Veteran Actor Prathap Pothen passes away
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X