»   »  ஷூட்டிங்குக்கு உதவிய கிராமத்து மக்களுக்கு கிடாவெட்டி விருந்து வைத்த வெத்துவேட்டு குழு!

ஷூட்டிங்குக்கு உதவிய கிராமத்து மக்களுக்கு கிடாவெட்டி விருந்து வைத்த வெத்துவேட்டு குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தங்கள் படப்பிடிப்புக்கு உதவிய கிராமத்து மக்களுக்கு கிடா வெட்டி விருந்து அளித்தது வெத்து வேட்டு படக்குழு.

விபின் மூவி பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். விழா பட நாயகி மாளவிகாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இளவரசு, கஞ்சாகருப்பு, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். யுகபாரதி பாடல்களுக்கு தாஜ் நூர் இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.மணிபாரதி.

கிராமத்து காதல்

கிராமத்து காதல்

படம் பற்றி இயக்குனர் மணிபாரதியிடம் கேட்டோம்....

"கிராமத்து காதலை மிக யதார்த்தமாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ஜனரஞ்சகமான இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாக இது இருக்கும். எழுபது சதவீதம் காமெடி, இருபது சதவீதம் காதல் மற்றும் குடும்பம் சென்டிமென்ட் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

300 துணை நடிகர்கள்

300 துணை நடிகர்கள்

படத்தின் பாடல் காட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு 300 துணை நடிகர்கள் வரவழைக்கப் பட்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம்.

விருந்து

விருந்து

சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினர். இந்த படத்தின் படிப்பிப்பு கடைசி நாள் அன்று படப்பிடிப்பிற்கு உதவிய திருச்சி அருகில் உள்ள கோப்பு என்ற கிராம மக்கள் ஐநூறு பேருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தோம் அவர்கள் அனைவரும் படக்குழுவினரை படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்," என்றார்.

பாடல் வெளியீடு

பாடல் வெளியீடு

படத்தின் பாடல்கள் இன்று வட பழனியில் உள்ள ஆர்கேவி திரையரங்கில் நடந்தது.

English summary
Vethu Vettu team has surprised Koppu village people by giving them a Briyani treat.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil