Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிசியானர் ஜீவி பட ஹீரோ.. போட்டாச்சு பூஜை!
சென்னை: 'ஜீவி' புகழ் நாயகன் வெற்றி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இயக்குநர் கே.பாக்யராஜ் படப்பிடிப்பு பூஜையை தொடங்கி வைத்து இப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: 8 தோட்டாக்கள் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக கச்சிதமாக பொருந்திருந்தார் வெற்றி, இந்த படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அடுத்ததாக வெளிவந்த ஜீவி படம் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து.

நடிகர் வெற்றிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கான பட பூஜை இன்று இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில், நடைபெற்றது. இப்படம் வெற்றிப்படமாக அமைய அனைவரையும் வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்க உள்ள புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர்.

இப்படம் சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக எடுக்க உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் ஜீவி புகழ் நாயகம் வெற்றி ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார்.

குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரங்களை விபரங்களை தயாரிப்பு நிறுவனம் பின்னர் அறிவிக்கும் என்று இயக்குனர் குரு ராமானுஜம் தெரிவித்தார்.