வெற்றிமாறன் அடுத்து இயக்க போவது இவரையா...அப்போ வாடிவாசல் நிலைமை?

சென்னை : தேசிய விருது பெற்ற டைரக்டரான வெற்றிமாறன் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. அடுத்து இவர் யாரை இயக்க போகிறார் என தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்பார்க்க துவங்கி விட்டது.

இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் டைரக்டராக மாறி விட்ட வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருவதால் தான் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகளை வெற்றிமாறன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதியில் நிற்கும் வாடிவாசல்

பாதியில் நிற்கும் வாடிவாசல்

வாடிவாசல் படத்தின் ப்ரீ போட்டோஷுட் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வரவழைக்கப்பட்டு, அதில் சில காளைகளின் தேர்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த காளைகளுடன் சூர்யா தற்போது பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்த கேப்பில் விடுதலை படத்தின் வேலைகளை முடித்து விடலாம் என வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் இணைய பிளான்

விஜய்யுடன் இணைய பிளான்

இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யை சந்தித்து ஏற்கனவே கதை சொன்னதாகவும், சில காரணங்களால் அந்த படம் பண்ண முடியாமல் போனதாகவும் கூறினார் வெற்றிமாறன். வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணைய காத்திருப்பதாக விஜய்யே கூறியதால், புதிய கதை ஒன்று விஜய்க்காக தயார் செய்திருப்பதாகவும், விரைவில் அவரை சந்தித்து கதை சொல்ல உள்ளதாகவும் கூறி இருந்தார்.

அடுத்து இவரை இயக்க போகிறாரா

அடுத்து இவரை இயக்க போகிறாரா

இந்நிலையில் புதிய தகவலாக தெலுங்கில் டாப் ஹீரோவான ஜுனியர் என்டிஆர்., ஐ வைத்து ஒரு படம் இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். ஜுனியர் என்டிஆர் தற்போது என்டிஆர் 31 படத்தில் நடித்து வருகிறார். கொரடலா சிவா இயக்கும் இந்த படம், கேஜிஎஃப் டைரக்டர் பிரஷாந்த் நீல் இயக்கும் படங்களை முடித்த பிறகு வெற்றிமாறன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டோலிவுட்டில் வெற்றிமாறன்

டோலிவுட்டில் வெற்றிமாறன்

ஜுனியர் என்டிஆர் படம் மூலம் வெற்றிமாறன் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளார். ஜுனியர் என்டிஆர் தற்போது இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் வெற்றிமாறன், விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களின் வேலைகளை துவக்கி உள்ளார்.

இத்தனை படங்களா

இத்தனை படங்களா

அதே சமயம் விஜய்யுடன் ஒரு படம் பண்ணுவதற்காக கதை தயார் செய்து வருகிறார். மற்றொரு புறம் கமல்ஹாசனுடன் ஒரு படம் பண்ணவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதற்கிடையில் ஏற்கனவே முடிவாகி, கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட ரஜினியுடனான படத்தை எப்போது துவக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் நடத்தப்பட உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

வாடிவாசல் தாமதமாகுமா

வாடிவாசல் தாமதமாகுமா

கைவசம் பல படங்களை வெற்றிமாறன் வைத்துள்ளதால் வாடிவாசல் படத்தின் வேலைகளை எப்போது துவக்குவார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விடுதலை படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படத்தின் வேலைகளை துவக்குவாரா அல்லது சூர்யாவும் பல படங்களில் கமிட்டாகி உள்ளதால் வாடிவாசல் படம் மேலும் தாமதமாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X