விஜய் – வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்...தளபதி 68 ஆ? தளபதி 69?

சென்னை : அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த விஜய் - வெற்றிமாறன் இணையும் படம் கிட்டதட்ட உறுதியாகும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த சூப்பர் ஹிட் படம் ரெடி என ரசிகர்கள் இப்போதே பேச துவங்கி விட்டனர்.

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் வெற்றிமாறன். காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை, அசுரன், சங்கத்தலைவன் என வரிசையாக பல ஹிட் படங்களை இயக்கி, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் 6 தேசிய விருதுகளை வென்றது. அசுரன் படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை வென்றது. தேசிய விருது டைரக்டர் என்ற இமேஜுடன் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு படமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விடுதலை, வாடிவாசல் என இரு படங்களை இயக்கி வருகிறார்.

தள்ளிவைக்கப்பட்ட வாடிவாசல்

தள்ளிவைக்கப்பட்ட வாடிவாசல்

நாவல்களை சினிமாவாக எடுத்து வெற்றி பெறுவதில் கைதேர்ந்தவரான வெற்றிமாறன், தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அதோடு சூர்யா நடிக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட வாடிவாசல் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை சமீபத்தில் துவக்கினார். ஆனால் விடுதலை படத்தின் வேலைகள் மீதம் இருப்பதால் அதை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை துவங்கலாம் என, வாடிவாசல் பட வேலைகளை தள்ளி வைத்துள்ளார் வெற்றிமாறன்.

என்னது விடுதலை 2 வருதா

என்னது விடுதலை 2 வருதா

சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி நக்சலைட்டாகவும் நடிக்கும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் வாடிவாசல் வேலைகளை வெற்றிமாறன் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை படத்திற்காக பிரம்மாண்டமாக காடு போன்ற செட் அமைத்து ஷுட்டிங் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின.

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, வெற்றிமாறன், விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். ஏற்கனவே விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறினார். ஆனால் அந்த படம் நடைபெறவில்லை. ஆனால் அந்த சமயத்திலேயே வெற்றிமாறன் உடன் இணைந்து ஒரு படம் பண்ண காத்துக் கொண்டிருப்பதாக விஜய் உறுதியாக தெரிவித்துள்ளார். இதை வெற்றிமாறனே தனது பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். தற்போது விஜய்யை சந்தித்து கூறுவதற்காக கதை ஒன்றை வெற்றிமாறன் தயார் செய்து விட்டாராம்.

செம பிஸி இருவருமே

செம பிஸி இருவருமே

தற்போது விடுதலை, வாடிவாசல் படங்களை இயக்கி வருவதால் வாடிவாசல் படத்தை முடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதை சொல்ல வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறாராம். அதே சமயம் விஜய்யும் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாஸ்டர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

எப்போ கதை சொல்ல போறீங்க

எப்போ கதை சொல்ல போறீங்க

இதனால் விஜய் - வெற்றிமாறன் இணையும் படத்தின் வேலைகள் துவங்க சிறிது கால அவகாசம் தேவைப்படுமாம். அனேகமாக 2023 ம் ஆண்டு மத்தியில் இவர்கள் இணையும் படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X