வெற்றிமாறன் பிறந்தநாள்.. வாடிவாசல் தீமில் வந்த கேக்.. விடுதலை இயக்குநரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் வெற்றிமாறனின் பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கடலூரில் பிறந்த வெற்றிமாறன் இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர்.
விடுதலை படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் வெற்றிமாறனுக்கு வாடிவாசல் தீம் கேக்கை ரசிகர்கள் கொடுத்து திக்குமுக்காட செய்து விட்டனர்.

வெற்றிமாறன் பிறந்தநாள்
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். சாதாரண பல்சர் பைக்கை வைத்தே மொத்த படத்தையும் பண்ணியிருக்காரே யார் இவர் என ரசிகர்கள் ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பே வெறும் சேவலை தூக்கிக் கொண்டு ஆடுகளம் படத்தை முடித்து தேசிய விருதுகளை அள்ளிய இயக்குநர் வெற்றிமாறனின் 47வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

விடுதலை ஷூட்டிங்கில் பிசி
நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக விரிவடைந்த நிலையில், அந்த படத்தை முடிக்க ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்நிலையில், அவரது படப்பிடிப்பு தளத்தில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு கேக் கட்டிங்கிற்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

வாடிவாசல் கேக்
நடிகர் சூரி முதல் பல சினிமா பிரபலங்கள் இயக்குநர் வெற்றிமாறனுக்கு சோஷியல் மீடியா மூலமாகவும் போன் செய்தும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், வாடிவாசல் பட தீம் கேக்குடன் ரசிகர்கள் சிலர் அவரை சந்தித்த நிலையில், அந்த கேக்கை பார்த்து விட்டு சற்றே ஷாக்கான வெற்றிமாறன் செம ஹேப்பியாக வாடிவாசல் எனக் கூறி விட்டு கேக் கட் செய்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

எப்போ ஸ்டார்ட் ஆகும்
நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தின் அறிவிப்புக்கு பிறகு ஜெய்பீம், வணங்கான், சூர்யா 42 என அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் பிசியாகி விட்டார். அசுரன் படத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. விரைவில் அதன் முதல் பாகம் வெளியாகும் என்றும் பின்னர் அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது தான் ஆரம்பமாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











