Coolie 9th Day Box Office: கூலி 9வது நாள் வசூல்.. விபரம் இதோ!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படத்தை ஹிட் ஆக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். ஆனால், அந்த படத்தை இண்டஸ்ட்ரியல் ஹிட் ஆக்குவது என்பது அதைவிட சவாலான விஷயம். அப்படி இருக்கும்போது, சில படங்கள் மீதுதான் அப்படியான எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அந்த படங்களும் ஏமாற்றம் அளிக்கும் போது, மொத்த திரையுலகமும் சோர்வடைந்துவிடும். அப்படியான படம் தான் ரஜினியின் கூலி. இந்த படத்தின் 9வது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இந்த படம் வெளியானது. படம் மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வழக்கமாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி போன்ற படங்களை அந்த வரிசையில் சொல்லலாம்.

Rajinikanth Coolie Day 9 Box Office Collection Not Cross Even 6 Cr Details Here
Photo Credit:

சொதப்பல்: இப்படி இருக்கும்போது கூலி படத்திற்கும் அப்படியான நிலை, ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. படம் விமர்சன ரீதியாக தோல்வி படம் என்பதை படக்குழு ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். லாஜிக் இல்லாத திரைக்கதை, கன்வின்ஸிங் இல்லாத திரைக்கதை, உயிர்ப்பு இல்லாத திரைக்கதை என படத்தின் திரைக்கதையை மட்டும் எடுத்து அதில் உள்ள பிரச்னைகளை பேசினால், ஒரு நாள் முழுக்க பேசலாம் எனக் கூறும் அளவுக்கு ஒரு டம்மியான திரைக்கதையை அமைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

விமர்சனம்: இதன் காரணமாக ரசிகர்களை கடந்து, பலதரப்பட்ட இணையவாசிகளும் படத்தை கண்டபடி கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் வணிக ரீதியாக முதல் நான்கு நாட்களிலேயே வெற்றிப் படமாக இன்னும் சொல்லப்போனால், தோல்வியைத் தவிர்த்த படமாக மாறிவிட்டது. படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 404 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இது மட்டும் இல்லாமல், ஓடிடி பிசினஸ் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், படத்தின் வியாபாரக் கணக்கு லாபத்தைக் ஈட்டிக் கொடுத்து விட்டது எனலாம்.

Rajinikanth Coolie Day 9 Box Office Collection Not Cross Even 6 Cr Details Here
Photo Credit:

வசூல்: இந்நிலையில் படம் முதல் 9 நாட்களில் இந்தியா முழுவதும் ரூபாய் 235.15 கோடிகள் வசூல் செய்துள்ளதாக சாக் நிக் வலைதளம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் படத்தின் 9வது நாள் வசூல் இந்தியா முழுவதும், ரூபாய் 5.5 கோடிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது. ரஜினி படத்தைப் பொறுத்தவரை ரூபாய் 5.5 கோடிகள் வசூல் என்பது சில்லறை கணக்கு. தமிழ் சினிமாவில் ரூபாய் 1000 கோடிகளை வசூலிக்கும் முதல் படமாக இது மாறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், படத்தின் வசூல் மொத்தமாக சுமார் 500 கோடிகள் முதல் 550 கோடிகள் வரை வசூலிப்பதே சவாலான விஷயமாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X