»   »   »  இதைவிட்டால் என் பிள்ளையைப் பாராட்ட வேறு மேடை கிடைக்காது: சிஷ்யனைப் பாராட்டிய பாரதிராஜா- வீடியோ

இதைவிட்டால் என் பிள்ளையைப் பாராட்ட வேறு மேடை கிடைக்காது: சிஷ்யனைப் பாராட்டிய பாரதிராஜா- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தை பார்த்திபன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர சென்னையில் நடத்தினார் பார்த்திபன். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், கரு.பழனிப்பன், பிரபு, பி.வாசு, கார்த்திக் சுப்புராஜ், தரணி, லிங்குசாமி, விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இதில் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, 'இரண்டு வருடங்களாக பல நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டால், என் பிள்ளையை பாராட்ட வேறு மேடை கிடைக்காது. யாரிடம் பேசினாலும், "பாரதிராஜா" என்று என் பெயரைச் சொல்லாத ஒரே சிஷ்யன் பாக்கியராஜ். எங்க இயக்குநர் என்று மட்டுமே சொல்லுபவன்" எனப் பாராட்டினார்.

English summary
On December 4, Actor, director Parthiepan had conducted a grand tribute event ‘Salute to K Bhagyaraj’ to honor his guru director Bhagyaraj. The event was attended by Bharathi Raja, SA Chandrasekar, Director Shankar, KS Ravikumar, Vikraman, P Vasu, Lingusamy, Gangai Amaran, Pandiyarajan and many others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil