விமானத்தில் செம ரொமான்ஸ்...மனைவி நயன்தாராவுடன் வெளிநாடு பறந்த விக்கி...எங்கு தெரியுமா?

சென்னை : விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் காதல் பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய அளவில் டிரெண்டான காதல் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். இவுர்கள் பற்றிய தகவல் என்றாலே அது உடனடியாக டிரெண்டாகி விடும்.

6 வருடங்களாக காதலித்த வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி ஜுன் 9 ம் தேதி திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமண தேதி அறிவித்தது முதுல் தற்போது வரை இவர்கள் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் செம வைரலாகி வருகின்றன.
,
திருமணம் முடிந்ததும் திருப்பதி, கேரளாவில் சில கோயில்களுக்கு சென்றவர்கள், தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட சென்றனர். அங்கு தங்களின் ரொமான்டிக் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.

ஹனிமூன் முடிந்ததும் பிஸி

ஹனிமூன் முடிந்ததும் பிஸி

ஆனால் ஹனிமூன் முடிந்து திரும்பியதும், நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் நடித்து வரும் ஜவான் படத்தின் ஷுட்டிங்கிற்காக மும்பை பறந்தார். தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார். விக்னேஷ் சிவனும் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை இயக்க சென்று விட்டார். கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் செம பிஸியாக இருந்து வந்தனர்.

விமானத்தில் செம ரொமான்ஸ்

விமானத்தில் செம ரொமான்ஸ்

இந்நிலையில் இன்று இருவரும் கிளம்பி ஐரோப்பாவிற்கு டூர் சென்றுள்ளனர். ஸ்பெயின், பார்சிலோனாவில் சுற்றி வர தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். விமானத்தில் மனைவி நயன்தாரா கையில் முத்தம் கொடுப்பது, மடியில் உட்கார வைத்து செல்ஃபி எடுப்பது போன்ற ரொமான்டிக்கான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார் விக்னேஷ் சிவன்.

ஒரே வேலை...மை ஒய்ஃபியுடன் டூர் போறேன்

ஒரே வேலை...மை ஒய்ஃபியுடன் டூர் போறேன்

அந்த போட்டோக்களுடன், தொடர்ந்து வேலை...வேலை...வேலை என ஓடிய பிறகு வெளிநாட்டில் பொழுதை கழிக்க செல்கிறோம். பார்சிலோனா நாங்க வந்துட்டு இருக்கோம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். மற்றொரு போட்டோவுடன், மை ஒய்ஃபியுடன் பார்சிலோனா போய் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இது தான் பிளானா

இது தான் பிளானா

லேட்டஸ்ட் தகவலின் படி, ஸ்பெயின் புறப்பட்டுச் செல்லும் இந்த ஜோடி ஐரோப்பா நாடுகளில் சுற்றி வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 10 நாட்கள் ஐரோப்பாவில் டூர் செல்லும் இவர்கள், அதற்கு பிறகு இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஜவான் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கிலும், விக்னேஷ் சிவன், அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 வேலைகளை துவக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இனி தினமும் ட்ரீட் தான்

இனி தினமும் ட்ரீட் தான்

தற்போது இருவரும் வேலைகளில் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றுள்ளனர். இதனால் இனி தினம் தினம் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் வகையில் ரொமான்டிக் போட்டோக்களை தாராளமாக சோஷியல் மீடியாவில் பகிர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாமே எதிர்பார்ப்பை கிளப்புதே

எல்லாமே எதிர்பார்ப்பை கிளப்புதே

நயன்தாரா தற்போது ப்ருத்விராஜுடன் இணைந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடித்த கோல்டு படம் செப்டம்பர் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படமும் ஏறக்குறைய முடிவடைய உள்ளது. இதற்கிடையில் நெட்ஃபிளிக்ஸ் வேறு நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண டாக்குமென்ட்ரியை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் எதை முதலில் எதிர்பார்ப்பது என தெரியாமல் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X