நயனுக்கு வைர, மரத நகைகள் பரிசளித்த விக்கி...பதிலுக்கு நயன் என்ன கிஃப்ட் கொடுத்தார் தெரியுமா?
சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட திருமணம் பற்றிய பேச்சு தான் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
இந்த திருமணம் பற்றிய வெளியாகி வரும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. இதுவரை யாருடைய திருமணத்திலும் இல்லாத அளவிற்கு பார்கோடு சரி பார்க்கப்பட்ட பிறகே விஐபி.,க்கள் முதல் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வெறும் வார்த்தையில் மட்டும் பிரம்மாண்டம் அல்லது நிஜமாகவே நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் செம பிரம்மாண்டமாக தான் நடத்தப்பட்டுள்ளது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணத்திற்காக மாறி மாறி கொடுத்துக் கொண்ட பரிசு தான் இதற்கு உதாரணம்.

சிம்பிளா நகை அணிந்த நயன்தாரா
திருமணத்தன்று நயன்தாரா சிவப்பு நிற புடவையில், சிம்பிளான ஏழடுக்கு ஆரம், ஒரு நெக்லஸ், சிறிய மூக்குத்தி என ராணி போல் உடையணிந்து வந்தார். பார்க்கத்தான் இவை அனைத்தும் சிம்பிள் இதை பற்றி விபரம் கேட்டால் மிரண்டு போய் விடுவீர்கள். நயன்தாரா அணிந்து வந்த நகைகள் அனைத்தும் விக்னேஷ் சிவன் பரிசாக வாங்கிக் கொடுத்ததாம்.
Recommended Video

இவ்வளவு காஸ்ட்லி நகைகளா
நயன்தாரா அணிந்து வந்த நகைகள் அனைத்தும் தங்கம், வைரம், வைடூரியம், மரகத கற்களால் செய்யப்பட்டவை. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய். நயன்தாரா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் 5 கோடி. அவர் அணிந்திருந்த மூக்குத்தியின் விலை 20 லட்சமாம். அவர் அணிந்திருந்த நெக்லஸ் எமரால்ட் மற்றும் மரகதங்களால் ஆனவை. இரு முழுக்க முழுக்க மரகத கற்களால் ஆன ரஷ்யன் மாடல் என கூறப்படுகிறது. நயன்தாரா அணிந்திருந்த ஏழடுக்கு ஆரம் வைரம், ரோல்கி, கோல்ஸ்கட், மரகத கற்களால் ஆனதாம். நயன்தாரா அணிந்திருந்த கம்மலும் வைரம், வைடூரிய கற்களால் ஆனதாம். நெற்றிசுட்டியும் வைரத்தால் உருவாக்கப்பட்டதாம்.

நயன்தாரா என்ன பரிசு கொடுத்தார்
தனக்கு காஸ்ட்லி நகைகள் பரிசளித்த காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாராவும் பதிலுக்கு பரிசு கொடுத்துள்ளார். சுமார் 20 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை தான் விக்கிக்கு அவர் பரிசளித்துள்ளாராம். விக்கிக்கு மட்டுமல்ல அவரது தங்கை ஐஸ்வர்யாவிற்கும் 30 க்கும் மேற்பட்ட தங்க நகைகளை நயன்தாரா பரிசளித்துள்ளாராம்.

பிரம்மாண்டமாக நடந்த திருமணம்
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. 21 புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க, ஏராளமான விஐபிக்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு, பல கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. ரஜினி, ஷாருக்கான், விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, போனி கபூர், சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம், உதயநிதி ஸ்டாலின், ஷாலினி அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான விஐபி.,க்கள் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











