Don't Miss!
- News
"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தலைசிறந்த படைப்பின் மிகச்சிறந்த ட்ரெயிலர்... விஜய் சேதுபதியை பாராட்டிய விக்னேஷ் சிவன்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.
காக்கா முட்டை படத்தை இயக்கிய டைரக்டர் மணிகண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பேசு
பொருளா
ஆகிறதுக்கும்
ஒரு
தனித்
திறமை
வேணும்ல...
தாமரை
செல்விக்காக
வரிந்துக்கட்டும்
நெட்டிசன்ஸ்!
இந்தப் படத்தின் புதிய ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெயிலருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை படத்தை இயக்கி கவனம் பெற்ற மணிகண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விவசாயிகளின் வலி, பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை இந்தப் படம் அலசுகிறது.

மணிகண்டன் இயக்கம்
மணிகண்டனின் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது விவசாயிகள் பிரச்சினையை மையமாக வைத்து கடைசி விவசாயி படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற வயதானவர் நாயகனாக நடித்துள்ளார்.

மாறுபட்ட தோற்றத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது சமீபத்திய படங்கள் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகியவை அவருக்கு கைக்கொடுக்காத நிலையில் இந்தப் படத்தை அவர் மிகவும் அதிகமாக எதிர்பார்த்துள்ளார். அதற்கு ஏற்றபடி படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ட்ரெயிலர்
இந்தப் படத்தை விஜய் சேதுபதி வாங்கி வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் -ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர். முன்னதாக படத்தில் இணைந்திருந்த இளையராஜா படத்திலிருந்து விலகியுள்ளார்.
Recommended Video

அதிக காட்சிகளில் விஜய் சேதுபதி
இரண்டு வருடங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், தற்போது இந்த ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ட்ரெயிலரில் நல்லாண்டி அதிகமாக இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த புதிய ட்ரெயிலரில் விஜய் சேதுபதி அதிகமாக இடம்பெற்றுள்ளார்.

விக்னேஷ் சிவன் பாராட்டு
இந்நிலையில் இந்த ட்ரெயிலருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு தலைசிறந்த படைப்பின் மிகச்சிறந்த ட்ரெயிலர் என்று அவர் பாராட்டியுள்ளார். மேலும் தன்னுடைய ஹீரோ விஜய் சேதுபதிக்கும் அவர் பாராட்டு கூறியுள்ளார்.