இந்து முறைப்படி தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : திருமணத்திற்கு பிறகு தானும், நயன்தாராவும் என்ன பிளான் வைத்திருக்கிறோம், என்ன செய்ய போகிறோம் என அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார் டைரக்டர் விக்னேஷ் சிவன்.

Recommended Video

Nayan-Wikki திருமணம் , புதிய Update கொடுத்த Vignesh Shivan *Celebrity |Filmibeat Tamil

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை அழைத்து, அதிகாரப்பூர்வமாக திருமணம் பற்றிய தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

ஓப்பனாக அறிவித்த விக்னேஷ் சிவன்

ஓப்பனாக அறிவித்த விக்னேஷ் சிவன்

இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போகப் போகிறோம். எனது காதலி நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். எங்களது திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அன்று மதியம் எனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படம் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

இது தான் எங்கள் பிளான்

இது தான் எங்கள் பிளான்

திருமணத்தில் நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜுன் 11 ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக கூறினார். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை டைரக்டர் கெளதம் மேனன் இயக்க போகிறார். இவர்களின் திருமண நிகழ்வு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

எந்த முறைப்படி திருமணம்

எந்த முறைப்படி திருமணம்

இந்து முறைப்படி தங்களின் திருமணம் நடைபெற உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்திற்காக 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் விவிஐபி.,க்கள் என்றும் கூறப்படுகிறது. ரஜினி, விஜய்,அஜித் ஆகியோருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாரெல்லாம் கலந்துக்க போறாங்க

யாரெல்லாம் கலந்துக்க போறாங்க

சமீபத்தில் தான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இவர்களின் திருமண விழாவில் திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

டிரெண்டிங்கில் தெறிக்குதே

டிரெண்டிங்கில் தெறிக்குதே

திருமணம் தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #VigneshShivan, #Nayanthara, #GVM, #Netflix ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளன. இதில் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இப்போதே வாழ்த்துக்களை பகிர துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X