Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
ஏகே 62 கதை பற்றி விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : அஜித்தின் ஏகே 62 படத்தின் கதை பற்றி விக்னேஷ் சிவன் சொன்ன தகவலை கேட்டு அஜித் ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். இதனால் படத்தை எப்போது துவக்குவார்கள் என ஆவலாக காத்திருக்கிறார்கள்.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் கடந்த ஒரு மாதமாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சென்னை மவுண்ட் ரோடு போன்று போடப்பட்டுள்ள செட்டில் இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
கட்டிபிடித்து..
முத்தம்
கொடுத்து
பர்த்டே
விஷ்..
விஜய்தேவரகொண்டா
சர்ப்ரைஸ்..
நெகிழ்ந்த
சமந்தா!

ரகசியம் காக்கும் ஏகே 61 டீம்
அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படம் பற்றிய தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அஜித் தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஜுலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என போனி கபூர் சொல்லி விட்டதால் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட்
2022 ம் ஆண்டு தீபாவளிக்கு ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டே அஜித் பிறந்தநாளன்று வலிமை படத்தின் ஸ்டில்களை வெளியிட போனி கபூர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் கொரோனா உச்சத்தில் இருந்ததால், மக்கள் கஷ்டமான சூழலில் இருக்கும் போது கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாம் என அஜித் கூறி விட்டதால் அனைத்தும் கைவிடப்பட்டதாம்.

உறுதியான ஏகே 62
ஏகே 61 படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை தாங்கள் தயாரிக்க உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க போகிறார் என்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 62 கதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது ரிலீசாகி உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ப்ரொமோஷனுக்காக படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேசில் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் பதிலளித்தனர். அப்போது அஜித் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம், ஏகே 62 படத்தின் கதை பற்றி கேள்வி எழுப்பினார். ஏகே 62 படம் பற்றி பலரும் விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்டனர்.
Recommended Video

விக்கி சொன்ன செம தகவல்
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ஏகே 62 படத்திற்காக 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து கதையை உருவாக்கி உள்ளேன். இந்த கதை அனைவரையும் கவர்வதாக உருக்கும். ஜாலியான கதையாக இருக்கும் என்றார். இதைக் கேட்டு குஷியான ரசிகர்கள், செம்மையாக கொண்டாடி வருகின்றனர். இதனால் விரைவில் ஏகே 62 பற்றிய அப்டேட்களும் வர துவங்கும் என எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.