»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர்கள் வாழ்வில் சினிமா இரண்டறக் கலந்தது என்று கூறுவதில் உண்மை இல்லாமல்இல்லை. பிரியமானவளே படம் பார்த்ததால், நீண்ட காலம் பிரிந்திருந்த ஒரு ஜோடி,மீண்டும் சேர்ந்துள்ளது.

தமிழகத்தின் வட ஆர்க்காடு மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன்.இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தையும், 3 வயதில்ஒரு மகனும் உள்ளனர். திருமண வாழ்வில் கசப்பு ஏற்பட்டதால், இருவரும் சிலகாலத்திற்கு முன்பு பிரிந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்து தமிழக திரையங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்பிரியமானவளே படம் திருப்பத்தூரிலும் திரையிடப்பட்டது. இந்தப் படத்தைஅமுதாவும், ஜெயகாந்தனும் பார்த்துள்ளனர்.

பிரியமானவேள படத்தின் நாயகனான, விஜய் பணக்கார வாலிபர். திருமணம் செய்துகொள்ளும் அவர், மனைவியை விட்டுப் பிரிந்து செல்கிறார். பின்னர் மனைவி இல்லாதவாழ்க்கை வெறும் பாலைவனம் என்பதை உணர்ந்து மனைவியைத் தேடி வந்துஇணைகிறார்.

இந்தப் படம், ஜெயகாந்தனையும், அமுதாவையும் பாதித்துள்ளது. மீண்டும் சேர்ந்துவாழ முடிவு செய்தனர். முடிவை செயல்படுத்தி, சந்தோஷமாக இணைந்தனர்.

இந்த செய்தி, விஜய் காதுக்கு எட்டியது. உடனடியாக அவர்களை சென்னையிலுள்ளதனது வீட்டிற்கு வரவழைத்து, பாராட்டினார்.

யு.என்.ஐ.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil