»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

"யூத்" படம் திரையிடப்பட்டுள்ள பல தியேட்டர்களில் திரைகளைக் கிழித்து விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையடுத்து அமைதியாக படம் பார்க்குமாறு என்று ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள "யூத்" படத்தில் "ஆலத்தோட்ட பூபதி நானடா..." என்ற டப்பாங்குத்துபாடல் இடம்பெற்றுள்ளது. இதில் விஜய்யுடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து ஆடியுள்ளார்.

மணிசர்மாவின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ஷாஜகான் படத்தில் வரும் விஜய்- மீனாவின் "சரக்குவச்சுருக்கேன்... இறக்கி வச்சுருக்கேன் ரேஞ்சில் உள்ளது. யூத் படம் ஓடும் தியேட்டர்களில் சிம்ரனுடன் விஜய்ஆடும் பாடல் காட்சியின்போது ரசிகர்கள் ஓவர் உற்சாகமடைந்து விடுகின்றனர்.

இந்தப் பாடலுக்கு அவர்களும் எழுந்து ஆட ஆரம்பித்து விடுகின்றனர். பலர் திரையருகே உள்ள மேடையில்சென்று ஆடுகின்றனர். பாடலை மீண்டும் காட்டச் சொல்லி விஜய் ரசிகர்கள் தகராறு செய்கின்றனர். மீண்டும்பாடலைக் காட்டாவிட்டால் தியேட்டர்களில் பெரும் கலாட்டா ஏற்படுகிறது.

திரையைக் கிழிப்பது, திரையை நோக்கி கல் எறிவது, நாற்காலிகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்துவருகின்றன. போலீஸ் உதவியுடன் தான் படத்தை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து விஜய்யிடம் பல திரையரங்க உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தனது ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரசிகர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிம்ரனும் நானும் ஆடிப் பாடும் பாடலை "ஒன்ஸ்மோர்" கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபடுவதாக பல தியேட்டர்அதிபர்கள் எனக்கு டெலிபோன் மூலம் தெரிவித்தனர்.

இந்த ரகளையால் சில ரசிக நண்பர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் நான் கண்ணீர் விட்டேன்(!!)என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் எப்போதுமே அமைதியானவர்கள், அடக்கமானவர்கள், மிகுந்த கட்டுப்பாடுஉடையவர்கள் என்பதை நான் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளில் நிரூபித்துள்ளீர்கள்.

இதே கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் நீங்கள் மற்ற பொது இடங்களிலும் நடந்து கொள்ள வேண்டும்.தியேட்டர் அதிபர்களுக்கு எந்த விதமான சேதத்தையும் ஏற்படுத்தாமல் உங்களுக்கும் தீங்கு நேராமல் அமைதியானமுறையில் படத்தைப் பார்த்து ரசியுங்கள்.

தியேட்டர்களில் அமைதியாக நடந்து கொண்டு உங்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் நீங்கள் எனக்குத் தரவேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil