»   »  விஜய் 59: மூன்று முகமா அல்லது வெற்றியா... குழப்பத்தில் தவிக்கும் விஜய்

விஜய் 59: மூன்று முகமா அல்லது வெற்றியா... குழப்பத்தில் தவிக்கும் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 59 படத்திற்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினி நடித்த மூன்று முகம் படத்தின் தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்திருப்பதாக ஏற்கனவே தட்ஸ்தமிழில் நாம் செய்தி கொடுத்திருந்தோம்.

இந்நிலையில் வெற்றி என்ற தலைப்பு படத்திற்கும் விஜய் நடித்திருக்கும் பாத்திரத்திற்கும் பொருத்தமாக இருப்பதால் இந்தத் தலைப்பை வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

விஜய் 59

விஜய் 59

புலி படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 59 படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவு பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு முதலில் மூன்று முகம் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

வெற்றி

வெற்றி

தற்போது படத்தின் தலைப்பை வெற்றி என்று மாற்றிவைக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம். விஜயகாந்த் நடிப்பில் 1984 ம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படத்தில் விஜய் சிறுவயது விஜயகாந்தாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயின் பெயர்

விஜயின் பெயர்

படத்தில் விஜயின் பெயருக்கும் வெற்றி என்னும் வார்த்தைக்கும் நிறைய தொடர்பிருக்கிறதாம், அதனால் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகும் வகையில் இந்த தலைப்பையே விஜய் இறுதி செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.

மொத்தம் 4

மொத்தம் 4

வெற்றி, மூன்று முகம் தவிர்த்து சத்தியமூர்த்தி ஐ.பி.எஸ் மற்றும் சத்ரியன் போன்ற தலைப்புகளும் பரிசீலனையில் இருக்கின்றனவாம். விஜய் இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிப்பதால் மேற்சொன்ன ஏதேனும் ஒரு தலைப்பையே படத்திற்கு வைக்கவிருக்கின்றனர்.

மூன்று முகமா(அ) வெற்றியா?

மூன்று முகமா(அ) வெற்றியா?

மூன்று முகம் மற்றும் வெற்றி இந்த 2 தலைப்புகளும் வைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர். நவம்பரில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டு இருக்கும் அட்லீ அதற்காக புயல் வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அனேகமாக இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் பெயர் வெளியாகலாம்.

மூன்று முகமா? வெற்றியா? சொல்லுங்க அட்லீ சொல்லுங்க...

    English summary
    Vijay seems to have got a mass title for his 59th film directed by Atlee Kumar. The buzz says that the name of his next film is "Vettri".Apart from "Vettri", some other speculated names of the project were "Moondru Mugam", "Sathyamurthy IPS" and "Chatriyan".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil