»   »  விஜய் படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

விஜய் படத்திற்கு இப்படியொரு தலைப்பா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 59 படத்தின் தலைப்பை தாறுமாறு என்று படக்குழுவினர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த பின்னரும் படத்திற்கு தலைப்பினை உறுதி செய்ய படக்குழுவினரால் முடியவில்லை. ஆரம்பத்தில் காக்கி என்று தலைப்பு வைத்து பிரச்சினை எழுந்ததால் அந்தத் தலைப்பு கைவிடப்பட்டது.

Vijay 59 Movie Gets New Title

பின்னர் சத்ரியன், வீரன் ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் இருந்தன. இந்நிலையில் படத்திற்கு தாறுமாறு என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜீவா நடிப்பில் ஒரு படத்திற்கு தாறுமாறு என்று தலைப்பிட்டு கடைசி நேரத்தில் படக்குழுவினர் பெயரை மாற்றினர். தற்போது இந்தத் தலைப்பை விஜய் கைப்பற்றி இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய் காவல் அதிகாரியாக நடிப்பதால் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனராம்.விரைவில் படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vijay - Samantha Starrer Vijay 59 Movie Gets New Title Tharumaru, The Official Announcement will be Released Soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil