»   »  தீபாவளி: கமல், அஜீத் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... விஜய் ரசிகர்களுக்கும் விருந்து காத்திருக்கிறது

தீபாவளி: கமல், அஜீத் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... விஜய் ரசிகர்களுக்கும் விருந்து காத்திருக்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல், அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் இந்தத் தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடும் வகையில் விஜய் 59 படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவற்றை வெளியிட விஜய் முடிவு செய்திருக்கிறாராம்.

இதனால் அவரது ரசிகர்களும் இந்தத் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்தத் தீபாவளி தினத்தில் கமல் ஹாசனின் தூங்காவனம் மற்றும் அஜீத்தின் வேதாளம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

Vijay 59 Title, First look on Diwali

இதனால் கமல் மற்றும் அஜீத் ரசிகர்கள் இந்தத் தீபாவளியை வரவேற்க உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் அவரது ரசிகர்களுக்கு இந்தத் தீபாவளி தினத்தில் விருந்தளிக்க முடிவு செய்திருக்கிறார்.

தனது படங்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும் தனது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 59 படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவற்றை தீபாவளி நாளில் வெளியிட விஜய் முடிவு செய்திருக்கிறாராம்.

இயக்குநர் அட்லீ மற்றும் படக்குழுவினரிடம் தனது முடிவைத் தெரிவித்த விஜய், அதற்குள் எல்லாவற்றையும் முடிவு செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்.

காக்கி மற்றும் சத்ரியன் 2 தலைப்புகளும் இப்போது பரிசீலனையில் இருப்பதாகவும், இவற்றில் ஏதாவது ஒரு பெயர்தான் படத்தின் தலைப்பாக இடம்பெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கிரைம் கலந்த ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் விஜய் 59 படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன், சுனைனா, பிரபு, ராதிகா சரத்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அட்லீயின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகி வரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Latest Buzz in Kollywood Vijay 59 Title, First Look Poster and Teaser will be Released on Diwali. Vijay 59 Written and Directed by Raja Rani Fame Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil