»   »  விஜய்க்கு "காக்கி" கிடைக்குமா?

விஜய்க்கு "காக்கி" கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தைத்தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்திற்கும் தற்போது புதிய பிரச்சினை ஒன்று முளைத்திருக்கிறது. விஜய் - அட்லீயின் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் புதிய படம் காக்கி.

விஜய் 59 என்று நீண்ட காலம் இருந்த இந்தப் படத்திற்கு தற்போதுதான் காக்கி என்று படக்குழுவினர் பெயர் சூட்டியிருக்கின்றனர். நடிகர் ரஜினியின் அதிரடிப் படங்களில் ஒன்றான மூன்று முகம் படத்தின் தலைப்பு படக்குழுவினருக்கு கிடைக்கவில்லை.

Vijay 59 Title Issue

எனவே படத்திற்கு காக்கி என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.இந்நிலையில் இந்தப் படத்திற்கு சூட்டப்பட்ட காக்கி தலைப்பின் உரிமையானது, வாய்மை படத்தின் இயக்குநர் செந்தில்குமாரிடம் இருக்கிறதாம்.

இந்தத் தலைப்பு தற்போது செந்தில்குமாரிடம் இருப்பதால் அவர் ஒத்துக் கொண்டால் தான் படத்திற்கு காக்கி என்று பெயர் வைக்க முடியுமாம். செந்தில்குமார் விட்டுக் கொடுக்காத பட்சத்தில் விஜய் படத்திற்கு வேறு தலைப்பு தேடவேண்டியதுதான் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதே போன்று ஏற்கனவே துப்பாக்கி படத்தின் தலைப்பிற்கும் பிரச்சினைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.செந்தில்குமார் காக்கியை விட்டுக் கொடுப்பாரா? பார்க்கலாம்.

English summary
Vijay's next Movie Vijay 59 Recently Titled as Khaki. The Title has been already Registered by Vaaimai Fame Director Senthil Kumar, Now Vijay 59 Title Change or Not wait and See!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil