»   »  குட்டிப்புலி சசிகுமாருடன் இணையும் புலி விஜய்

குட்டிப்புலி சசிகுமாருடன் இணையும் புலி விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய் சசிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அநேகமாக 60வது படமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது சிம்புத்தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 58வது படமாகும். அடுத்ததாக அட்லி இயக்கத்தில் 59 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே விஜய் நடிக்கும் 60 வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்டிப்புலி சசிகுமார்

குட்டிப்புலி சசிகுமார்

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுப்ரமணியபுரம் மாஸ்

சுப்ரமணியபுரம் மாஸ்

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படம் 2008ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாஸ் படமாகவும் பேசப்பட்டது. தேசிய விருதுகளையும் பெற்றது.

மாஸ் கதையில்

மாஸ் கதையில்

அதேபோல ஒரு மாஸ் கதையை விஜய்க்காக ரெடி செய்து வைத்துள்ளாராம் சசிகுமார்.

ஓகே சொன்ன விஜய்

ஓகே சொன்ன விஜய்

சசிகுமார் கூறியுள்ள கதை விஜய்க்கு பிடித்துப் போகவே தற்போது கைவசம் உள்ள இரண்டு படங்களை முடித்துவிட்டு நடிப்பதாக கூறியுள்ளாராம்.

ஹன்சிகா – ஸ்ருதிஹாசன்

ஹன்சிகா – ஸ்ருதிஹாசன்

புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர்.

சமந்தா – எமி

சமந்தா – எமி

அட்லி இயக்கத்தில் நடிக்கும் விஜய்க்கு சமந்தாவும் எமி ஜாக்சனும் நடிக்கின்றனர்.

60ல் யாரு ஜோடி

60ல் யாரு ஜோடி

சசி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் மாஸ் கிளாஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Now there is exciting news from confirmed sources that Vijay and Sasikumar will be joining hands for Vijay 60. It is worth remembering that Sasikumar before making it big as an actor,produced and directed ‘Subramaniapuram’ in 2008, winning multiple national and international awards, pioneering the new wave era in Tamil cinema.
Please Wait while comments are loading...