»   »  விஜய் 60: செப்டம்பரில் 'பர்ஸ்ட் லுக்'... நவம்பரில் ஆடியோ

விஜய் 60: செப்டம்பரில் 'பர்ஸ்ட் லுக்'... நவம்பரில் ஆடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு செப்டம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விஜய் 60'. பரதன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியானது.

Vijay 60 First Look Details

தற்போது கிடைத்த தகவல்களின்படி பொங்கலுக்கு இப்படத்தை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை அவரின் தோற்றத்தில் மட்டுமே மாற்றம் இருக்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்து விட்டாலும் இன்னும் 'விஜய் 60' என்றே இப்படம் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை செப்டம்பர் மாதமும், பாடல்களை நவம்பரிலும் வெளியிட பரதன் திட்டமிட்டிருக்கிறாராம்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Vijay 60 First look Poster may be Release on September Month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil