»   »  விஜய் 60 பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளில் வெளியாகிறதா?

விஜய் 60 பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளில் வெளியாகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பிறந்தநாளில் விஜய் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தன்னுடைய 60 வது படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு 2 வேடமென்பதால் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் நடிக்கவுள்ளனர்.

Vijay 60 First Look Release on June 22

சதீஷ் காமெடி வேடத்திலும் ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெல்லை வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி விஜய் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் படத்தின் டைட்டிலையும் அன்று வெளியிடப் போவதாக கூறுகின்றனர்.

1965ம் ஆண்டு விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் எங்கள் வீட்டுப் பிள்ளை.

தற்போது 51 வருடங்களுக்குப்பின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Sources Said Vijay 60 First look may be Released on Vijay Birthday.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil