»   »  விஜய் 60 எந்த ஹிட் படத்தின் ரீமேக்கும் அல்ல - வதந்திகளை மறுக்கும் படக்குழு!

விஜய் 60 எந்த ஹிட் படத்தின் ரீமேக்கும் அல்ல - வதந்திகளை மறுக்கும் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 60' எந்த ஹிட் படத்தின் ரீமேக்கும் அல்ல என படக்குழு விளக்கமளித்திருக்கிறது.

தெறியைத் தொடர்ந்து விஜய் தற்போது 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vijay 60 is not Remake any hit Film

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர். வில்லன்களாக டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், ஜெகபதி பாபு நடித்து வருகின்றனர்.

இதனால் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு இப்படத்தில் குறைவிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யைத் தொடர்ந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் கல்லூரி மாணவியாக நடிக்கின்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தின் ரீமேக் தான் 'விஜய் 60' என கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

ஆனால் இது உண்மையில்லை என படக்குழு மறுத்திருக்கிறது. மேலும் 'விஜய் 60' கதை எந்தப் படத்தின் ரீமேக்கும் அல்ல.ஆனால் இதுகுறித்த எந்த தகவலையும் தற்போது சொல்வதற்கில்லை என தெரிவித்துள்ளனர்.

English summary
Vijay 60 Movie Crew denies all Rumors Regarding the Movie Story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil