»   »  விஜய் 61... எப்போ ஃபர்ஸ்ட் லுக்... எப்போ ரிலீஸ்? இதோ விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்!

விஜய் 61... எப்போ ஃபர்ஸ்ட் லுக்... எப்போ ரிலீஸ்? இதோ விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

விஜய்யின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அது.

விஜய்யின் 61வது படம் இது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, அட்லீ இயக்குகிறார். தோனாண்டாள் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தின் 100 தயாரிப்பு இது.

Vijay 61... release date announced officially

விஜய் பிறந்த நாளில்...

பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிடுகின்றனர்.

இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட்மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் மாதம் உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது இந்தப் படம்.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவை சரளா, சத்யன் ஆகியோரும், முக்கிய வேடத்தில் சத்யராஜும் நடித்து வருகின்றனர்.

சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர் நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

சில முக்கிய காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.

Read more about: vijay, release, விஜய்
English summary
The release date of Vijay 61 firstlook has been officially announced today by the movie crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil