»   »  ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த விஜய்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த விஜய்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் வேகமாக தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்ட பின்னரும் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களது படப்பிடிப்பு சில விஷயங்களால் தான் 3 நாட்கள் மட்டும் நடக்க இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்துவிட்டனர். இருந்தாலும் அந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பலர் விஜய்யை சமூக வலைதளங்களில் தாக்கி வந்தனர்.

Vijay 62 shooting spot photo goes viral

இப்படி பிரச்னைகள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்போது, 'விஜய் 62' படத்தின் ஷூட்டிங் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வருகிறதாம்.

ஷூட்டிங்கின்போது, குவிந்திருந்த ரசிகர்களை நோக்கி கை அசைத்திருக்கிறார் விஜய். ரசிகர்கள் பலத்த ஆரவாரத்தோடு விஜய்யை பார்த்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

English summary
After the strike announcement, Vijay's film shooting takes place. In this scenario, Vijay meets the fans during the shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X