»   »  'விஜய் 63' - போட்டா போட்டியில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்!

'விஜய் 63' - போட்டா போட்டியில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மெர்சல்' படத்திற்குப் பிறகு விஜய்யின் இமேஜும், மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. தற்போது முருகதாஸ் இயக்கும் 'விஜய் 62' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்யை நாயகனாக வைத்து படம் இயக்கவும், தயாரிக்கவும் கடுமையான போட்டி எழுந்துள்ளது. விஜய்யின் 63-வது பட பேச்சுவார்த்தை துவங்கிவிட்டதாகத் தெரிகிறது.

'விஜய் 62' படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அதற்கடுத்த படத்தை இயக்கவிருப்பது யார் எனக் கேள்வி எழுந்துள்ளது.

விஜய் 62

விஜய் 62

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் 62-வது படம். இந்தப் படத்தையடுத்து விஜய்யின் 63-வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள், தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்து திரையுலகில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு

விஜய் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்து, அவருக்கு ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் அடுத்து விஜய் நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல் கடந்த சில வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படம் வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது.

தேனாண்டாள் பிலிம்ஸ்

தேனாண்டாள் பிலிம்ஸ்

மெர்சல் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காகத்தான் விஜய் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகிறார்கள். மெர்சல் படம் வெளிவந்து 200 கோடியைக் கடந்தாலும் படத்தின் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலையும், சோதனைகளையும் பட வெளியீட்டின் போது சந்தித்தார்கள்.

நன்றிக்கடனாக

நன்றிக்கடனாக

பல சிக்கல்கலையும் அவர்கள் சமாளித்து படத்தைக் காப்பாற்றியதால் தேனாண்டாள் பிலிம்ஸுக்காக நடிப்பதுதான் சரி என விஜய் நினைக்கிறாராம். ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகிகள் விஜய்யுடன் நெருக்கமாகியிருப்பதால் இதற்கு அதிக வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.

சங்கிலி முருகன்

சங்கிலி முருகன்

தற்போது புதிய தகவலாக விஜய் நடித்து 1997-ம் ஆண்டு வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' படத்தைத் தயாரித்த சீனியர் தயாரிப்பாளரான சங்கிலி முருகன் தயாரிப்பில் விஜய் நடிக்கப் போகிறார் என்றும் பேச்சு பரவியுள்ளது.

ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்

சங்கிலி முருகன் தயாரிப்பில் உருவானால் இந்தப் படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்க உள்ளாராம். இரண்டு படங்களின் மூலமும் செம ஹிட் கொடுத்த இயக்குநர் என்பதால் ரசிகர்களும் குஷி ஆகிறார்கள்.

மூவருக்கு வாய்ப்பு

மூவருக்கு வாய்ப்பு

விஜய்யை சமீபத்தில் இயக்குனர்கள் மோகன்ராஜா, வினோத் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளார்கள். 'தெறி', 'மெர்சல்' என இரண்டு ஹிட்டுகளைக் கொடுத்தால் அட்லீயும் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். இந்த மூவரில் யாருக்கு விஜய் 63 கிடைக்கப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

English summary
The shooting of Vijay 62 is going on and the question is about who will direct the next film of Vijay. Vijay has recently been met by directors Mohan Raja and H.Vinod. Atlee has joined Vijay's favorite directors list. These three directors are waiting for Vijay's tick.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil