சபாஷ் சரியான போட்டி... புத்தாண்டில் விஜய்–அஜித் ரசிகர்ளுக்கு செம ட்ரீட்

சென்னை : ஒவ்வொரு முறையும் விஜய் மற்றும் அஜித் படங்களின் அப்டேட்கள் வெளியிடப்படும் போதும் அவர்களின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மோதிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த புத்தாண்டில் அது முடிவுக்கு வர போகிறதாம்.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்தே இந்த புத்தாண்டை கொண்டாட போகிறார்களாம். இதற்கு காரணம் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்

போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. பொங்கலுக்கு உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதே போல் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துள்ளது. 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஸ்பெஷல் ட்ரீட்

ஸ்பெஷல் ட்ரீட்

2022 ம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால் புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் வழங்கப்பட உள்ளது. புத்தாண்டு அன்று விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஸ்பெஷல் ப்ரொமோஷன் வீடியோ மற்றும் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ரிலீஸ்

ஒரே நாளில் ரிலீஸ்

தற்போது லேட்டஸ்ட் தகவலாக அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலரும் புத்தாண்டு நாளிலேயே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். ஒரே நாளில் விஜய் மற்றும் அஜித் படங்களின் டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. இதனை இருவரின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் இது சரியான போட்டியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

செம போட்டியா இருக்குமே

செம போட்டியா இருக்குமே

ஒரே நாளில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளதால் இந்த படங்கள் தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஹாஷ்டேக்குகள் அதிகம் உருவாக்கப்பட்டு, செம போட்டி நடக்கும் என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X