Don't Miss!
- News
நானும் உதயநிதியும் விளையாடிய மைதானம்.. அப்போ நாங்க எதிரணி.. நினைவுகள் பகிர்ந்த அன்பில் மகேஷ்!
- Sports
இரட்டை சதம் குறித்து யோசிக்கவே இல்லை.. என்னுடைய பிளானே வேறு.. 'ஆட்டநாயகன்' சுப்மான் கில் கருத்து
- Finance
கிடைப்பதை எல்லாம் விற்கும் எலான் மஸ்க்.. பீதியில் டிவிட்டர் ஊழியர்கள் ..?! உண்மை என்ன..?
- Lifestyle
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
- Automobiles
இந்த பைக்குகளுக்கு பெட்ரோல் கொஞ்சோண்டு போதும்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த ஃப்ளெக்ஸி ஃப்யூவல் டூ-வீலர்கள்!
- Technology
ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!
- Travel
நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
அந்த பிகில் 2 மட்டும் வேணாம்ணே.. டிரெண்டாகும் தளபதி 68.. விஜய், அட்லி சம்பளம் மட்டும் இவ்வளவா?
சென்னை: இயக்குநர் அட்லி மனைவி பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட நிலையில், #Thalapathy68 ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
வாரிசு படத்தை முடித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்துக்கு நடிகர் விஜய் சமீபத்தில் படு ரகசியமாக பூஜை போட்டு உள்ளார்.
அடுத்தபடியாக தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லி தான் இயக்கப் போகிறார் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
என்னது
நாங்க
கர்ப்பமா..
8
ஆண்டுகளுக்குப்
பிறகு
அப்பா
ஆகப்
போகும்
சந்தோஷத்தில்
குழம்பிட்டாரா
அட்லி?

அப்பாவாகப்போகும் அட்லி
இயக்குநர் அட்லிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகின்றன. பல நாட்களாக அட்லி மற்றும் பிரியா அட்லி காத்திருந்த அந்த சந்தோஷமான தருணம் அவர்களது வாழ்க்கையில் வந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் பிரியா அட்லிக்கு நேற்று கோலாகலமாக சீமந்த விழா நடைபெற்றது. நடிகர் விஜய் அதில், கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.

வாழ்த்திய விஜய்
நண்பன் படத்தில் பணியாற்றும் போதே இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஒரு படம் பண்றோம் என முடிவு செய்த விஜய் தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் அடித்தார். அதன் பின்னர் இயக்குநர் அட்லி ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க பாலிவுட் பறந்தார். இந்நிலையில், சீமந்த விழாவுக்கு சென்ற விஜய் இருவரையும் வாழ்த்தினார்.

ஷாருக்கான், நயன்தாரா வரல
நயன்தாராவின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தார் நடிகர் ஷாருக்கான். ஆனால், அட்லி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகின. பதான் படத்திற்கான ப்ரமோஷனில் ஷாருக்கானும் கனெக்ட் பட ப்ரமோஷனில் நயன்தாராவும் பிசியாக உள்ளனர்.

தளபதி 68
விஜய் - அட்லி மீண்டும் சந்தித்துள்ள நிலையில், தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லி இயக்கப் போவது உறுதியாகி விட்டது என #Thalapathy68 ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சில நாட்களுக்கு முன்னதாகவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகப் போவதாக அக்ரிமென்ட்டே கையெழுத்தாகி விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

400 கோடி பட்ஜெட்
ஜவான் படத்தை இயக்கியுள்ள அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள பான் இந்தியா படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என தகவல்கள் டிரெண்டாகி வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவே பெருமைப்படும் படமாக தளபதி 68 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சம்பளம்
மேலும், தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Thalapathy68 முழுவதுமே பல சினிமா டிராக்கர்கள் இப்படியொரு ஹாட் அப்டேட்டை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

அட்லிக்கு 50 கோடியா
இதில், இயக்குநர் அட்லிக்கு மட்டும் 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக பெரிய உருட்டு ஒன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் ஷங்கர், ராஜமெளலி மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களே இதுவரை அத்தனை கோடி சம்பளம் வாங்கியதில்லை என்கிற நிலை இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் ஓவராக தெரியலையா என அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பிகில் 2 மட்டும் வேணாம்
உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி முடிந்த நிலையில், உடனடியாக விஜய் - அட்லி சந்திப்பு நடந்துள்ளது. உடனடியாக பிகில் 2 எடுத்து விடலாமா என்கிற யோசனையை மட்டும் அட்லி சொன்னால் வேண்டாம்னு சொல்லிடுங்கண்ணே என பல விஜய் ரசிகர்களே கமெண்ட் போட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ராயப்பன் ப்ரீக்வெல் எடுத்தால் தாறுமாறாக இருக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகுபலி, பொன்னியின் செல்வன் போல ஒரு படத்தை விஜய்யை வைத்து அட்லி பண்ணினால் நல்லா இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம்.