»   »  விஜய் ஆண்டனி 'திமிரு புடிச்சவன்'

விஜய் ஆண்டனி 'திமிரு புடிச்சவன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனி திமிரு புடிச்சவன் என்று படித்ததும் அவரின் குணத்தை பற்றி நினைக்க வேண்டாம்.

விஜய் ஆண்டனியின் படங்கள் வித்தியாசமான கதையம்சம் கொண்டவை. மேலும் அவரின் பட தலைப்புகளும் வித்தியாசமாகவே இருக்கும். மனிதர் பார்த்து பார்த்து தேர்வு செய்வார் போன்று.

இந்நிலையில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

புதுமுகம் கணேஷாவின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு தான் திமிரு புடிச்சவன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

 முதல் முறை

முதல் முறை

விஜய் ஆண்டனி முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். வழக்கமான ஹீரோ, வில்லன் மோதும் படமாக இது இருக்காது. ஆக்ஷன் காட்சிகள் அதிரும் என்று கணேஷா தெரிவித்துள்ளார்.

 வித்தியாசம்

வித்தியாசம்

திமிரு புடிச்சவன் படத்தில் வித்தியாசமான விஜய் ஆண்டனியை பார்ப்பீர்கள். இளைஞர்கள் யாரை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த படம் பரிந்துரைக்கும் என்கிறார் கணேஷா.

இசை

இசை

திமிரு புடிச்சவன் படத்தில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் இசை, எடிட்டிங் வேலையையும் கவனிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த கதையே விஜய் ஆண்டனியை மனதில் வைத்து எழுதப்பட்டதாம்.

 இயக்குனர்

இயக்குனர்

திமிரு புடிச்சவன் கதையோடு விஜய் ஆண்டனியை 3 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். வேறு யாரையும் வைத்து படம் எடுக்க விரும்பாமல் அவருக்காக காத்திருந்தேன் என்கிறார் கணேஷா.

English summary
Vijay Antony is playing the role of a police officer in his upcoming movie Thimiru Pudichavan to be directed by debutant Ganesha. Vijay Apart from acting, Antony is taking of music and editing departments also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil