»   »  சைத்தானுக்கும் ஜெயலட்சுமிக்கும் என்ன சம்பந்தம்?

சைத்தானுக்கும் ஜெயலட்சுமிக்கும் என்ன சம்பந்தம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆன்டணி தனது சைத்தான் படத்தில் ஜெயலட்சுமி என்ற பெயரை பயன்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சில போஸ்டர்களில் ஜெயலட்சுமி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. அந்த ஜெயலட்சுமி யார் என்பது இப்போது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


அருந்ததி நாயர், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் நடிகராக அறிமுகமாகிறார். இது சைக்கோ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


சைத்தான் போஸ்டர்கள்

சைத்தான் படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் பாம்புகள் புடை சூழ வெறியோடு காணப்பட்டார் விஜய் ஆண்டனி. அடுத்தது ஆவி பறக்கும் காபி கப் பிடித்துக் கொண்டு கண்களில் கோபத்துடன் கோட் சூட் போட்டு காட்சி அளிக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த கப், சுவற்றில் ஜெயலட்சுமி என்ற பெயர் எழுதியுள்ளது.


நரியும் ஜெயலட்சுமி

இப்போது புதிதாக வெளியிடப்பட்ட போஸ்டரிலும் விஜய் ஆண்டனி ஒரு நரியை முறைத்துக்கொண்டு இருக்கிறார். அதிலும் ஜெயலட்சுமி என்ற பெயர் எழுதப்பட்டுள்ளது.


ஜெயலட்சுமி யார்?

ஜெயலட்சுமி யார்?

சைத்தான் படம் சைக்கோ திரில்லர் படம் என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. ஆனால் சைத்தானுக்கும் ஜெயலட்சுமிக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லவில்லை.
இறுதிக்கட்ட பணிகள்

இறுதிக்கட்ட பணிகள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


தெலுங்கிலும் ஹிட்

தெலுங்கிலும் ஹிட்

சத்தமில்லாமல் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் படம் 100வது நாள் விழா கொண்டாடப்போகிறது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள சைத்தான் படத்தை ஆரா சினிமாஸ் வெளியிடுகிறது. தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. விஜய் ஆண்டனி படங்களில் இந்தப் படமே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


English summary
Vijay Antony starer Saiththaan movie new poster attracted Fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil