»   »  விஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்!

விஜய் நடிக்க வேண்டியது... அவருக்கு பதில் விஜய் ஆன்டனி நடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தே... பய....சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!- வீடியோ

டிராபிக் ராமசாமிக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, அவர் பெயரிலேயே ஒரு படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் டைட்டில் வேடத்தில் நடிப்பவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவருக்கு மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

Vijay Antony in Traffic Ramasamy

கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறாராம். வழக்கமாக எஸ்ஏசி இந்த மாதிரி வேடங்களுக்கு விஜய்யை நடிக்க வைப்பார். ஆனால் இனி அது முடியாது என்பதால், தான் அறிமுகம் செய்ய விஜய் ஆன்டனியை நடிக்க வைத்திருக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு ஜந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல் ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் எஸ்ஏ சந்திரசேகரன் தனது ஒரிஜினல் கெட்டப்புடனே தோன்றுகிறார். நெற்றியில் அந்த சிவப்பு ஒற்றை நாமம் மட்டும் கிடையாது. இரண்டு பாக்கெட்டுகளிலும் கேஸ் கட்டை வைத்துக் கொண்டு, ரயிலில் பயணிப்பபது போல அந்தப் படத்தில் உள்ளார்.

கெட்டப் ஓகேவான்னு பார்த்துச் சொல்லுங்க!

English summary
SA Chandrasekaran's getup in Traffic Ramasamy has released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X