»   »  'ஓகே நண்பா நான் செய்றேன்' ராகவா லாரன்ஸை வியப்பில் ஆழ்த்திய விஜய்

'ஓகே நண்பா நான் செய்றேன்' ராகவா லாரன்ஸை வியப்பில் ஆழ்த்திய விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகவா லாரன்ஸின் 60 குழந்தைகளுக்கு 'தெறி' சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.

விஜய்-சமந்தா இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தெறி'. 2 வாரங்கள் கடந்து 3 வது வாரத்தில் இப்படம் அடியெடுத்து வைத்திருக்கிறது.


Vijay Arranged Theri Special Show for 60 Children's

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் இல்லத்தில் உள்ள குழந்தைகள் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர்.


இது லாரன்ஸின் காதுகளை எட்ட உடனடியாக நடிகர் விஜய்க்கு போன் செய்து இந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார். இதற்கு 'ஓகே நண்பா நான் செய்றேன்' என்று விஜய் கூறியிருக்கிறார்.


சொன்னதுபோலவே 60 குழந்தைகளுக்கும் 'தெறி' சிறப்புக் காட்சியை விஜய் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.விஜய்யின் இந்த ஏற்பாடு குறித்து "60 டிக்கெட்டுகள் மட்டும்தான் ஏற்பாடு செய்து கொடுப்பார் என்று நினைத்தேன்.


ஆனால் 60 குழந்தைகளுக்காக ஒரு சிறப்புக்காட்சியையே ஏற்பாடு செய்து எங்களை அசத்தி விட்டார். இப்போது நானும் என்னுடைய குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.


எனது குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்திய நண்பன் விஜய்க்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.


ராகவா லாரன்ஸ்-விஜய் இருவரும் 'திருமலை' படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vijay Arranges Special Screening of Theri for Raghava Lawrence and his 60 children! Hats-off sir!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil