விஜய் – அட்லீ கூட்டணியில் தளபதி 68?... அடேங்கப்பா பட்ஜெட்டே சும்மா பதற வைக்குதே…!

சென்னை: விஜய் தற்போது நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் இணையும் விஜய், அடுத்து தளபதி 68 படத்தின் இயக்குநரையும் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் பொங்கல் விருந்து

விஜய்யின் பொங்கல் விருந்து

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் வாரிசு, அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், தீபாவளி அன்று தளபதி 67 படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தளபதி 68 அப்டேட்

தளபதி 68 அப்டேட்

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தற்காலிகமாக 'தளபதி 67' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகும் எனக் கூறப்படுகிறது. விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாகவும், 'விக்ரம்' திரைப்படம் போன்று மல்டி ஸ்டார்ஸ் ஜானரில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் இயக்குநர் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கூட்டணி

மீண்டும் கூட்டணி

இந்த அப்டேட் படி, விஜய்யின் 68வது படத்தை அவரது ஃபேவரைட் இயக்குநரான அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இந்தக் கூட்டணி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்தே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், 'ஜவான்' படத்தை இயக்க அட்லீக்கு வாய்ப்புக் கொடுத்தார். இந்நிலையில், மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

பிரம்மாண்ட பட்ஜெட்

பிரம்மாண்ட பட்ஜெட்

தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், விஜய் - அட்லீ சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், அதில் தளபதி 68 படம் குறித்து முடிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை, சுமார் 450 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டுள்ளதாம். பிகில் படத்தில் விஜய்யின் ராயப்பன் கதையை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் அட்லீயிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனால், விஜய் - அட்லீ இணையும் 'தளபதி 68' படம், ராயப்பன் கேரக்டரை பின்னணியாகக் கொண்டு உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது ரசிகர்களிடம் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X