»   »  நடிகர் விஜய்யை பிடிக்க 1000 காரணங்கள்!... டுவிட்டரில் வாழ்த்தும் ரசிகர்கள்

நடிகர் விஜய்யை பிடிக்க 1000 காரணங்கள்!... டுவிட்டரில் வாழ்த்தும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய்யின் 41வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த மூன்றுநாட்களாக டுவிட்டர் வலைத்தளத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரசிகர்கள் விஜய் நடித்த புலி போஸ்டர், டீசரை டிரெண்ட் செய்ததைப் போல பிறந்த நாளையும் பல வித ஹேஸ்டேக்குகள் போட்டு டிரெண்ட் செய்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் சேதுபதி ரசிகர்கள், சூர்யா ரசிகர்களும் இணைந்து வாழ்த்தி வருகின்றனர். தனுஷ், பாடகர் கிரிஷ் உள்ளிட்டோரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.

நம்பர் 1 நாயகன்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலவிதங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HBDDearVIJAY என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

எனக்கு ரொம்ப பிடிக்கும்

விஜய்யை வெறுக்க பலருக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் ஆனால் விஜய் நேசிக்க 1000 காரணங்கள் இருக்கிறது வாழ்த்துக்கள் விஜய் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

அழகிய தமிழ் மகன்

விஜய்யின் எளிமை, அழகு, என்றும் இளமை அவர் ஒரு அழகிய தமிழ் மகன் என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர்.

தலைவா

தலைவனுக்கு இதயத்தில் இருந்து லட்சக்கணக்கான வாழ்த்துக்களை கூறியுள்ளார் ஒரு ரசிகர்.

என்னா ஒரு சந்தோசம்

ஸ்கிரீன்ல உன்ன பார்க்கும்போதே சந்தோசம் பிச்சுக்குதேப்பா என்பது ஒருவரின் உற்சாக பதிவு

தனுஷ் வாழ்த்து

என் அன்பான நண்பர் மனித நேயம் மிக்க விஜய் சார்க்கு பிறந்தநாள் வாழ்த்து என்று நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

கிரிஷ் வாழ்த்து

இனிய பிறந்தநாள் வாழ்த்து விஜய் அண்ணா என்று வாழ்த்தியுள்ளார் பாடகர் கிரிஷ்.

English summary
Vijay turns 41 today June 22. As a biurthday treat to all Vijay fans, birthday wishes hastag #HBDDearVIJAY the Internet and Social media by storm and it is trending everywhere.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil