பிரபல ஹீரோவின் வீடு அருகே சொகுசு வீடு வாங்கிய விஜய்...எதுக்கு இந்த புது வீடு தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய் தற்போது பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, இடைவிடாமல் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தை முடித்ததும் வாரிசு படத்தில் தற்போது நடித்து வரும் விஜய், அடுத்ததாக தளபதி 67, தளபதி 68 படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Recommended Video
தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜும், தளபதி 68 படத்தை அட்லியும் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் துப்பாக்கி 2 எடுக்க போவதாக சொல்லி வருகிறார்.
விஜய்யை அடுத்தடுத்து இயக்க போகிற டைரக்டர்கள் லிஸ்ட்டில் அடுத்து யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புது வீடு வாங்கிய விஜய்
இந்த சமயத்தில் விஜய் புதிதாக சொகுசு வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய்யின் அலுவலகம், அடையாறில் உள்ள விஜய்க்கு சொந்தமான வீட்டில் இயங்கி வருகிறது.

வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதி ஒன்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள அப்பார்ட்மென்டில் சொகுசு ஃபிளாட்டை விஜய் வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சொகுசு வீட்டின் விலை ரூ.35 கோடி என சொல்லப்படுகிறது.இதே அப்பார்ட்மென்டில் நடிகர் ஆர்யா ஏற்கனவே ஒரு வீடு வாங்கி உள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் தான் விஜய்யும் வீடு வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

எதுக்கு இந்த புது வீடு?
விரைவில் அடையாறில் இயங்கி வரும் தனது அலுவலகத்தை இந்த புதிய சொகுசு வீட்டிற்கு மாற்ற விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது தனது அலுவலகம் இயங்கி வரும் அடையாறு சொகுசு வீட்டை தனது விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகம் ஷேர் செய்யும் ரசிகர்கள்
பொதுவாகவே ரசிகர்கள் தங்களின் ஃபேவரைட் ஸ்டார்கள் நடிக்கும் படங்களை பற்றிய தகவல்களை விடவும், அவர்களின் சம்பளம், சொத்து மதிப்பு, சொத்துக்கள் விபரங்களை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.அதே போல் அவர்களில் லைஃப் ஸ்டையில் பற்றியும் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.இதனால் தற்போது விஜய்யும் ஆர்யாவும் பக்கத்து பக்கத்தில் சொகுசு வீடு வாங்கி இருக்கும் தகவலை அவர்களின் ரசிகர்கள் தீயாய் பரவ விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











