ராணுவ வீரருக்கு தைரியம் சொன்ன விஜய்: வைரலாகும் ஆடியோ
சென்னை: காஷ்மீர் கிளம்பிய ராணுவ வீரருடன் விஜய் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 2002ம் ஆண்டு முதல் ராணுவத்தில் உள்ளார். அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். விடுமுறையில் ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால் காஷ்மீருக்கு திரும்பி வருமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அவர் காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றார். விஜய்யின் தீவிர ரசிகரான அவர் காஷ்மீருக்கு கிளம்புவது குறித்து தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பாண்டியிடம் தெரிவித்தார்.
இந்த தகவலை பாண்டி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்திடம் தெரிவிக்க அவர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விஜய் தமிழ்ச்செல்வனுடன் செல்போனில் பேசினார்.
அவர் தமிழ்ச்செல்வனுக்கு தைரியம் கூறிய ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வாட்ஸ்ஆப்பிலும் இந்த ஆடியோ அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











