»   »  கலைப்புலி தாணு எப்பேர்ப்பட்டவர் தெரியுமா? - தெறி விழாவில் விஜய் சொன்ன குட்டிக் கதை

கலைப்புலி தாணு எப்பேர்ப்பட்டவர் தெரியுமா? - தெறி விழாவில் விஜய் சொன்ன குட்டிக் கதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

குட்டிக் கதைகள் சொல்வதிலும் ரஜினி பாணியைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் விஜய். இப்போதெல்லாம் எந்த மேடையில் மைக்கைப் பிடித்தாலும் ஒரு குட்டிக் கதை சொல்கிறார் மனிதர்.

நேற்று நடந்த தெறி இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு சின்ன கதை சொன்னார்.


Vijay compares Thanu with Tiger

"நாம் நிறைய தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஒரு புலி மான் கூட்டத்தை துரத்திக் கொண்டு ஓடும். அப்போது அந்த புலி எல்லா மான்களையும் துரத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு அதை வேட்டையாடி கொல்லும். அந்த புலிதான் கலைப்புலி.


வெற்றி என்ற ஒன்றை மட்டுமே சினிமாவில் இலக்காக கொண்டு, அதை தேடிப் பிடித்து புலியாக வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறார்," என்றார்.


இந்தப் படம் தாணு - விஜய் இணையும் மூன்றாவது படம். ஏற்கெனவே சச்சின், துப்பாக்கி படங்களை விஜய்யை வைத்து தயாரித்துள்ளார் தாணு.

English summary
Vijay has compared Thaanu with a successful tiger in Theri audio launch event.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil