twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே வாரத்தில் வாஷ் அவுட் ஆன லைகர்...நம்பிக்கையை கைவிடாமல் காத்திருக்கும் படக்குழு

    |

    சென்னை : விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்த லைகர் படம் ஆகஸ்ட் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது.

    Vijay Deverakondas Liger film is a complete washout

    பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் வசூல் ரிலீசான ஒரே வாரத்திலேயே அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. ஞாயிற்றுக்கிழமை இருந்ததை விட திங்கட்கிழமையான நேற்று படத்தின் வசூல் 50 சதவீதமாக சரிந்தது. நேற்று சராசரியாக ரூ.2.50 கோடிகளை மட்டுமே இந்த படம் வசூலாக பெற்றுள்ளது.

    ஒட்டுமொத்தமாக வாஷ்அவுட் ஆகி, கிட்டத்தட்ட தியேட்டர்களில் இருந்து தூக்கும் நிலையில் லைகர் படம் உள்ளது. கடந்த 5 நாட்களில் லைகர் படம் இந்தியில் 13.75 கோடிகளையும், ஆந்திரா / தெலுங்கானாவில் 21.50 கோடிகளையும், உலகம் முழுவதும் 61.22 கோடிகளையும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    நியூயார்க் வெயிலுக்கு டிரெஸ் போட பிடிக்கலையாம்.. மியா கலிஃபா எப்படி போஸ் கொடுத்திருக்காரு பாருங்க! நியூயார்க் வெயிலுக்கு டிரெஸ் போட பிடிக்கலையாம்.. மியா கலிஃபா எப்படி போஸ் கொடுத்திருக்காரு பாருங்க!

    அதே சமயம் விஜய் தேவரகொண்டா நடித்த படங்களில் 6 வது அதிக ஓப்பனிங் டே வசூல் பெற்ற படம் லைகர் தான் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் நடித்த டியர் காம்ராட் (17.9 கோடி), அர்ஜுன் ரெட்டி (8.2 கோடி) ஆகியவற்றின் முதல் நாள் கலெக்ஷனை விட லைகர் படத்தின் வசூல் மிக குறைவு தான்.

    பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமே படுதோல்வி அடைந்துள்ளதால் விஜய் தேவரகொண்ட செம அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டா தான் காரணம் என முதலில் சொல்லி விட்டு, பிறகு தியேட்டர் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விஷயமும் பரபரப்பை கிளப்பியது.

    ஆரம்பத்தில் சரிவை சந்தித்தாலும் இனி வரும் நாட்களில் லைகர் படம் பிக்அப் ஆகும். எந்த நேரத்திலும் லைகர் படத்தின் வசூல் சூடுபிடிக்க துவங்கும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ஆனாலும் படம் ரிலீசானது முதலே நெகடிவ் விமர்சனங்களை மட்டுமின்றி, ரசிகர்களிடமும் கிண்டல் கேலிக்கு ஆளான லைகர் படம் எப்படி பிக்அப் ஆகி, வசூலை அள்ளும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது என புரியாமல் திரைத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.

    விஜய் தேவரகொண்டாவின் முதல் பாலிவுட் படம், பான் இந்தியா படம், சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் நடித்துள்ள படம் என பல விதங்களில் எதிர்பார்க்கப்பட்ட லைகர் படம் கிட்டத்தட்ட ஃபிளாப் என்றே மீடியாக்கள் குறிப்பிட்டு வருகின்றன.

    English summary
    Vijay Deverakonda's Liger had a disastrous first week at the box office. The film is a complete washout.The film saw a huge drop on Monday and managed to collect approximately Rs 2.50 crore in the theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X