»   »  ஃபேஸ்புக்கில் மோடியை அவதூறாக விமர்சித்த விஜய் ரசிகர் கைது

ஃபேஸ்புக்கில் மோடியை அவதூறாக விமர்சித்த விஜய் ரசிகர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக்பாஸ் ஹரீஷுக்கு இப்படி ஒரு ஆசையா?-வீடியோ

விருதுநகர்: பிரதமர் நரேந்திர மோடியை ஃபேஸ்புக்கில் அவதூறாக விமர்சித்த விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்தவர் திருமுருகன்(19). டிப்ளமோ படித்துள்ளார். விருதுநகர் மாவட்ட பாஜக செயலாளரான மாரிமுத்து ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் திருமுருகனிடம் சாட் செய்துள்ளார்.

Vijay fan held for abusing Modi on Facebook

அப்போது மாரிமுத்து மெர்சல் படத்தில் வந்த ஜிஎஸ்டி, மருத்துவம் பற்றிய வசனங்கள் குறித்து மீம்ஸ் அனுப்பியுள்ளார். இதை பார்த்த திருமுருகன் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பதில் அளித்துள்ளார்.

திருமுருகனின் பதிலை பார்த்த மாரிமுத்து இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவதூறாக மெசேஜ் அனுப்பியதை ஒப்புக் கொண்டார் திருமுருகன்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

English summary
Srivilliputhur police arrested Vijay Fan for abusing PM Modi on Facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil