»   »  மெர்சல் தலைப்பு.... குஷியில் விஜய் ரசிகர்கள்! #Mersal #Thalapathy61

மெர்சல் தலைப்பு.... குஷியில் விஜய் ரசிகர்கள்! #Mersal #Thalapathy61

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 61வது படத் தலைப்பு இன்று மாலை வெளியானது. படத்தின் தலைப்பும் டிசைனும் உண்மையாகவே மெர்சலாக உள்ளதென ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாளை விஜய்யின் 43வது பிறந்த தினம். இந்த நாளைக் கொண்டாடும் வகையில் இன்றே அவரது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள்.

Vijay Fans celebrate Mersal title and firstlook

படத்தின் தலைப்பை மெர்சல் என வைத்துள்ளனர். ஒரு ஜல்லிக்கட்டு எருது மாதிரியே டைட்டிலை டிசைன் செய்துள்ளனர்.

முதல் தோற்றப் போஸ்டரில் ஜல்லிக் கட்டுக் காளை மாதிரி முறுக்கான விஜய் நெற்றியில் திருநீறு குங்குமத்துடன் புன்னகைத்தபடி நிற்கிறார். அவருக்குப் பின்னால் ஜல்லிக்கட்டுக் காளைகள் அணிவகுக்கின்றன.

இந்தத் தலைப்பும், டிசைனுமே படத்தின் அட்டகாசமான வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

English summary
Vijay fans are celebrating the actors 61st movie title Mersal and first look
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil