twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சி.எம்., ஆகாத அந்த கிளைமேக்ஸ் காட்சி போதும்.. விஜய் சர்கார் எப்போவுமே நடக்கும்!

    49-பி, ஒருவிரல் புரட்சி, ஓட்டுப்போட வைக்க ஒரு படம், இலவசங்கள் வேண்டாம் என பல நேரடி அரசியல் விஷயங்கள் நிறைந்த சர்கார் படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது.

    |

    Recommended Video

    #1YearOfBlockbusterSARKAR ஜம்முனு கொண்டாடும் விஜய் ரசிகர்கள் !

    சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சர்கார் படத்தில் நடிக்கிறார் என்ற டாக் வந்தவுடனே நடிகர் விஜய் சி.எம்.,ஆக நடிக்கிறார் என்ற வதந்தி தான் தீயாக பரவியது.

    ஆனால், கிளைமேக்ஸில் வரும் அந்த காட்சி உங்களுக்கான ஆட்சியாளர்களை நீங்க தேர்வு செய்யுங்க என சொல்லிவிட்டு, சி.எம். நாற்காலி மீது ஆசைப்படாத ஆளாக விஜய் செல்லும் காட்சி தான் சர்கார் படத்தின் ரியல் வெற்றி.

    பதவி ஆசை இல்லாத ஆட்களை தான் மக்கள் விரும்புவார்கள் என அறிந்து வைத்துள்ள நடிகர் விஜய், சினிமாவில் எப்போதுமே தனது சர்காரை நடத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

    49-பி குறித்த பாடம் எடுத்து ஒரு விரல் புரட்சி நடத்திய விஜய்யின் சர்கார் திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது.

    சர்கார்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி, பழ. கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்கார் திரைப்படம் வெளியானது. மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடித்த சர்கார் படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார்.

    49-பி

    உங்க ஓட்ட உங்களுக்கு தெரியாம இன்னொருத்தன் கள்ளத்தனமா போட்டா, அதற்கு எதிராக 49-பி மூலம் முறையிட்டு, உங்களுக்கான ஓட்டுரிமையை நீங்கள் செலுத்தலாம் என்ற வாக்களிக்கும் பாடத்தை விஜய்யின் சர்கார் தமிழ் மக்களிடையே விதைத்தது. 49-பி குறித்த விசயத்தை சர்கார் படத்தில் வைத்த இடத்திலேயே இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெற்றியை பதிவு செய்துவிட்டார்.

    வசூல் சர்கார்

    சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. விஜய்யின் சர்கார் படத்துடன் போட்டியாக வரும் என அறிவிக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே படங்கள் தள்ளிப்போன காரணத்தினால், தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக 30 கோடிக்கும் அதிக வசூலை சர்கார் ஈட்டியது. இந்த தீபாவளிக்கு கைதி படத்துடன் பிகில் ரிலீசானதால், பிகில் படத்தால் கூட சர்காரின் முதல் நாள் வசூலை வீழ்த்த முடியவில்லை.

    சர்ச்சை

    மக்களுக்கு இலவசமாக அரசு வழங்கிய மிக்சர், கிரைண்டர், டிவி என அனைத்தையும் தீயில் போட்டு கொளுத்தும் காட்சி, மற்றும் படத்தில் வரும் நம்பர் 1, நம்பர் 2 என நேரடியாக தமிழக அரசியலை குறிவைத்து சர்கார் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.,க்கு எதிராக விஜய் பேசி சர்ச்சை உருவானதை விட சர்கார் படத்திற்கு எழுந்த சர்ச்சை பல மடங்கு அதிகமாக இருந்தது.

    ஒரு வருடம்

    சர்கார் படத்தில் விஜய் ஒரு விரல் புரட்சி நடத்தி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதனை, இந்தியளவில் விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 49-பி குறித்தும், சர்கார் படத்தில் நீக்கப்பட்ட முருகதாஸின் காட்சிகளையும் அதிகளவில் விஜய் ரசிகர்கள் அந்த ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். சர்கார் படத்தில் வில்லியாக நடித்த நடிகை வரலக்‌ஷ்மியும் சர்கார் ஒருவருட கொண்டாட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தீபாவளி

    தீபாவளி

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படம், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சல், சர்கார், பிகில் என ஹாட்ரிக் தீபாவளியை விஜய் ரசிகர்கள் தளபதி தீபாவளியாக கொண்டாடினர். ஆனால், அடுத்த தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகுமா என்பது சந்தேகம் தான்.

    English summary
    Still Holds the Highest Collected Opening Day Record in TN (32+cr In TN) and Created Lot Of Controversy But Broken all The BoxOffice Record awareness of Section 49p to the voters of Tamil Nadu. Sarkar really create many memories to the Tamil audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X