»   »  "என்ன்னா வேகம்..." வெளியான சிலமணி நேரங்களிலேயே பேனர் அடித்த 'தளபதி' ரசிகர்கள்! #Thalapathy62

"என்ன்னா வேகம்..." வெளியான சிலமணி நேரங்களிலேயே பேனர் அடித்த 'தளபதி' ரசிகர்கள்! #Thalapathy62

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிலமணி நேரத்தில் இணையதளத்தை தெறிக்க விட்ட தளபதி ரசிகர்கள்- வீடியோ

சென்னை : 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணி இணையும் படம் 'விஜய் 62'.
'சன் பிக்சர்ஸ்' பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வைரலாகின. அந்தப் படங்களை வைத்து பேனர் அடித்து கொண்டாட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'விஜய் 62' படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'பைரவா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைந்து நடிப்பதில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஜய் 62 போட்டோஷூட்

விஜய் 62 போட்டோஷூட்

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான போட்டோஷூட்டில் நடிகர் விஜய் பங்கேற்றிருக்கிறார். இப்படத்தில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான புகைப்படங்கள்

வெளியான புகைப்படங்கள்

சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நிமிடத்திலேயே இது சமூக வலைதளங்களில் லீக்கானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளியான சில நிமிடங்களிலேயே அந்தப் புகைப்படங்கள் வைரலாகப் பரவின.

ரசிகர்கள் பேனர்

புகைப்படங்கள் வெளியான சில மணிநேரத்திற்குள்ளேயே அந்தப் படங்களை வைத்து விஜய் ரசிகர்கள் பேனர் அடித்து கொண்டாட்டத்தைத் துவங்கி விட்டனர். தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களும் பேனரோடு எடுத்த படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. தொழிலதிபர் போன்ற கெட்டப்பில் விஜய் இருக்கும் புகைப்படம் விஜய்யின் கேரக்டர் பற்றிய ஆவலைத் தூண்டியுள்ளது.

English summary
The photoshoot photos and video of 'Vijay 62' film were viral on social networks a few hours ago. Vijay fans have begun celebrating with banners of Vijay 62 new look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X