அப்போ அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள்.. மீண்டும் மீண்டும் போஸ்டர் தானா? ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் 100வது நாள் ஷூட்டிங் போட்டோ முதற்கொண்டு வந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு புதிய போஸ்டர் மட்டுமே வெளியாகி இருப்பது தளபதி ரசிகர்களை டென்ஷன் ஆக்கி உள்ளது.

டார்க் லுக்கில் டஸ்ட் பறக்க முகத்தில் ரத்தக் காயங்களுடன் சிங்கமாக விஜய் கெத்துக் காட்டும் போஸ்டர் ரசிகர்களை ஆறுதல் படுத்தவே நடிகர் விஜய் வெளியிட்டுள்ளாரா என்கிற கேள்வியையும் கிளப்பி இருக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் புரமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

மீண்டும் ஒரு போஸ்டர்

மீண்டும் ஒரு போஸ்டர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்காக தளபதி விஜய் ஒரு புதிய பீஸ்ட் பட போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்த்ததே வேற

ரசிகர்கள் எதிர்பார்த்ததே வேற

இன்று மாலை 6 மணிக்கு சூப்பரான அப்டேட் வரப் போகுது என சன் பிக்சர்ஸ் சஸ்பென்ஸ் ட்வீட் போட எதற்கும் துணிந்தவன் அப்டேட்டா அல்லது பீஸ்ட் அப்டேட்டா என ரசிகர்க்ள் குழம்பினார்கள். பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட் தான் என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் இல்லை

ஃபர்ஸ்ட் சிங்கிள் இல்லை

ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகாமல் மற்றொரு புதிய போஸ்டர் வெளியானது. சன் பிக்சர்ஸ் அல்லது இயக்குநர் நெல்சன் இதனை வெளியிட்டால் தளபதி ரசிகர்கள் கொலைகாண்டு ஆகிவிடுவார்கள் என தெரிந்தே தளபதி விஜய் மூலமாக இந்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன அனிருத்

என்ன அனிருத்

பீஸ்ட் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை இன்னமும் முடிக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புத்தாண்டுக்கு தளபதி விஜய்யின் பீஸ்ட் பாடலை போட்டு ஆட்டம் போட நினைத்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X